என் காதல் சொல்ல நேரமில்லை 555

என்னுயிரே...


உன்னை என் நினைவில்

வைத்த நாள் முதல்...


என் வாழ்க்கையை பற்றி

நான் சிந்தித்ததே இல்லை...


உன் நினைவுகள் என்னை

முழுவதும் நீ ஆட்கொண்டதால்...


உன்மீது கொண்ட
காதலை
சொல்ல தெரியாமல்...


நான் தவித்த

நாட்கள்தான் எத்தனை...


மனதைரியம்

வளர்த்து கொண்டு...


உன்னிடம் நான்

வந்த அந்த நாள்...


நீ இருந்தாய்

மாற்றானின் மனைவியாய்...


என்னில் இருந்த காதல்

கருகியது என்னுள்ளே...


யாருக்கும் தெரியாமல்
போனது என் காதலும்...
மறுஜென்மம் இருந்தால்

அப்போதாவது...


உன்னிடம் காதலை சொல்ல

தைரியம் வருமா யோசிக்கிறேனடி.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (16-Feb-19, 8:11 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 1412

மேலே