கற்க மறுக்கும் பாடம்

காலம் துப்பிய
எச்சில்கள்

காய்ந்து போன
தடம்கூட

தெரிவதில்லை

இடைப்பட்ட நேரம்

துப்பிய தோற்றம்
விதவிதமாய்

பார்வைக்கு எற்ற
உருவகமாய்

மாறிக் கொண்டே
இருக்கும்

மாய தோற்றம்

துப்புவது தொடர்
நிகழ்வாய்

காய்ந்து போவதும்
தொடர்கதையாய்

எழுதியவர் : நா.சேகர் (16-Feb-19, 8:24 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 212

மேலே