உவஉக

என்னய்யா அது? 'உவஉக' ன்னு தெரு செவத்துல எழுதியிருக்காங்க.
எங்க பாத்தாலும் 'உவஉக' சுவரொட்டிகளை ஒட்டியிருக்காங்க.
@@@@
யோவ், அது ஒரு புதிய அரசியல் கட்சி. கடினமான வேலை செய்யற உழைப்பாளிகள் எல்லாம் சேர்ந்து இந்தக் கட்சியை ஆரம்பிச்சிருக்காங்க.
@@@@@
'உவஉக'-ன்னா என்னய்யா?
@@@@
உழைக்கும் வர்க்கத்தை உயர்த்தும் கட்சி 'உவஉக'.
@@@@@@
அந்தச் சுவரொட்டில அச்சிட்டிருக்கறதப் படிய்யா.
@@@@@
உழைக்கும் வர்க்கத்தை உயர்த்தும் கட்சி முதல் மாநில மாநாடு. இடம் மூட்டை தூக்கவோர் நலச்சங்க அரங்கம் சென்னை. நாள் 16-02-19 ஞாயிறு மாலை 3.30லிருந்து 4.30க்குள். தலைவர் தள்ளுவண்டி தங்கராசு. செயலாளர் உப்புமூட்டை
இருதயராஜ். பொருளாளர் சில்லறை சத்தியவான். மற்றும் பலர் உழைக்கும் வரக்கத்தை உரிமையுடன் அழைக்கிறார்கள். வாரீர்! வாரீர்!
@@@@
பாராட்ட வேண்டிய விசயம் அய்யா இது. நாம எல்லாம் இந்தப் புதிய கட்சிக்கு ஆதரவு கொடுக்கணும்.

எழுதியவர் : மலர் (17-Feb-19, 12:45 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 56

மேலே