பெண்ணே நீ எங்கே

நீயின்றி
நானில்லை என்றவளே...
நான் இங்கிருக்க
நீ எங்கே...?

நினைத்த நினைவுகள் எல்லாம்
நீங்காமல் நிலைத்துவிட
நீண்ட கனவுகளை கொடுத்தவளே
நீ எங்கே...?

கயல் விழியால்
கவிதை கற்பித்தவளே..
கரம் பிடித்து காதல் பயின்றவளே
நீ எங்கே...?

நித்தம் ஒரு முத்தக் கவிபாடி
நெஞ்சுக்கு ஆறுதல் அளித்தவளே...
நனையாமல் நானிருக்க
முந்தானையில் குடைபிடித்தவளே
நீ எங்கே....?

எட்டுத்திக்கும் தேடுகின்றேன்..
எட்டா தொலைவினையும்
வினவுகின்றேன்..
நீ எங்கே...?

சுவாசக் காற்றாக
மாறியவள்...
சுவடறற்ற காற்றாக
மாறினாயோ...
முகத்தை மறைத்தது போல்
முகவரியையும் மறைத்தாயோ...?

என் வாழ்வின்
முன்னுரை வாசித்தவளே
முற்றாக மறந்தாயோ என்னை...
பெண்ணே நீ எங்கே...?

எழுதியவர் : சா.மனுவேந்தன் (17-Feb-19, 6:46 pm)
சேர்த்தது : மனுவேந்தன்
Tanglish : penne nee engae
பார்வை : 437
மேலே