அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை

மதுவை ஒழிப்போம் என்று
மனப்பால் குடிக்காதீர்!
குடித்து போதையில்
ருசி கண்டு தள்ளாடும்
டாஸ்மாக்கர்கள் நாங்கள்!

தேர்தல் அறிக்கையில்
அடக்கி வாசியுங்கள்!
மதுவில் கைவைத்தால்
என்னாகும் ஆகுமென்பதை
நாடே அறியும்!
வாக்குச் சீட்டில் பதிலடி
நாங்கள் கொடுத்ததை
மறந்து இருந்துவிடாதீர்!

ஊக்கமது கைவிடேலின்
உட்ப்பொருளை
குடித்துச் சுவைப்பவரே அறிவர்
உங்களுக்கது புரியாது!

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
நன்றி: இந்து தமிழ் திசை 17-02-19 கருத்துச் சித்திரம்.

எழுதியவர் : மலர் (17-Feb-19, 7:32 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 143

சிறந்த நகைச்சுவைகள்

மேலே