காத்திருக்கும் என் காதலே

அன்பே
இருண்ட வாழ்வின்
வளிம்பில் வெளிச்சமென்று
உனைக் கண்டேன்

கண்கள் அழைத்து
காதல் பூர்த்து
காலத்தால் வாடி
இன்னும் நீ வருவாயென்று
உன்னுடன் வாழ காத்திருக்கிறேன்!!

காயங்கள் சூழ்ந்து
கண்ணீரில் மிதந்து
கறையேறா கப்பலாக
கலங்கறை விளக்கமென உனை
தேடி -- விட்டில்
பூச்சியாக வளம் வந்தேன்!

உன்னிடத்தில் கேட்ட
வினா எல்லாம்
வீணாக மாரியும் -- உன்
விடைக்காக விதியின் கைக்கோர்த்து
வீராப்பாக நடந்து சென்றேன்!!

வீராப்பாக நடந்தவன்
பல விடியல்களில்
சில நொடிகளில்
வெளிச்சம் கொடுக்கும்
உன் விழியினைக்காணாமல்
மனம் நொந்தேன்...

உள்ளம் நொந்து
உடல் வெந்து
காய்ந்த பூவாக உன்னை
காதலித்த என் உயிர் உதிர
உடன் சேர்ந்து உலகமே வாடியது...

வாடிய காரணத்தை
வார்த்தைகளால் சொல்லாமல்
காதலித்து வாழ்ந்த - என்
காலத்தையே மூடி மறைத்தேன்!

மாற்றம் தேவையென்று
புதிதாய் ஒரு
தோற்றம் கொண்டேன்

புதுத் தோற்றம் கொண்டு
இந்த பூமியில்
புதுவாழ்வை கைப்பற்றும் வேளையில்
வறுமையென்ற ஒன்று
என்னிடத்தில் தீயாக பற்றியது...

வறுமையின் தீயை அனைப்பதில்
வருடங்கள் கழியத் தொடங்கியது
தடுத்து வைக்க
வருடம் ஒன்றும் கைபொம்மையில்லை!
அதனால் அதன்மேல்
நான் கவலைகொள்ளவில்லை!

இன்னும் ஒரு
இன்னலில் என் இதயம்
சிக்கி தவித்தது...

வறுமையின் நாடகத்தை
நாளெல்லாம் நான் காண
நன்கு கண்டு -- காதல்
கொண்ட உன்னை என்
நினைவின் கடைக்கோடியில் வைத்தேன்!

நினைவின் கடைக்கோடியில்
"நீ" இருந்தாலும் -- நீங்காத
என் கண்களில் பூப்பறித்தவ(ன்)ள்
நீ தானே!!

காம்பில் பறித்த பூவே
சில மணி நேரம்
வாசம் தேடும் போது -- என்
காதலை பறித்த பூவே!! உன்னை
கண்கள் தேடாமல் இருக்குமா

கண்ணீர் காய்ந்த
இந்த கண்கள்
"கள்(ளனே)ளி உன்னைக் காண"
வழியேதும் தெரியாமல்
பாதைகளில் பயணம் தொடராமல்
தொடர்ந்து துன்பப்பட்டேன்...

துணிந்து காதலிக்க
தொடங்கிய அன்றே
துன்பங்களை தோள்மீது
சுமந்ததால் -- துன்பங்களையெல்லாம்
துடைத்தெரிய ! அவை
தூசியாய் போனது!!

தானாக அன்பு வளர்த்து
அதை -- நானாக
உன்னிடத்தில் காட்டியது
காட்டுத்தியாக என்னை எரித்தது! அதில்
நீ சிந்திய கண்ணீர் மறைத்தது!!

தீயாக என்னை எரித்தவ(னே)ளே
காரணமின்றி நீ
"கண்ணீர் சிந்தியதை " -- நான்
விருப்பமென்று என்னவா?
வெறுப்பென்று என்னவா ? எனதெரியாமலே
தினந்தோறும் தவித்து வாழ்ந்தேன்!!!

தினந்தோறும் வாழ்ந்தவ(ளு)னுக்கு
விதியின் வசத்தால்
வீதியோரத்தில் -- விழிகளுக்கு
நீ எட்டினாய்!!

பார்வைக்கு எட்டிய உன்னால்
நான் மீண்டும்
பைத்தியமானேன்...


பார்வையின் சாரல்கள்
ஈரக்காற்றாக என்மேல் வீச -- அதில்
என் இருதயம் துருப்பிடித்தது!

காலமெல்லாம்
என்னோடு நீ வேண்டுமென்றே
கணவுகள் இருந்தும்!
உறங்க முடியாமல்
உருகி தவித்தேன்!!

காற்றாக
உன்னை சூழ நினைத்தாலும்
நிகழ்கால சூழ்நிலை -- என்னை
நெருப்பாக சுட்டெரிக்கின்றது!!

கவிதைகளால் உன் கண்கள்
என்னிடம் பேச
காலத்தின் பிடியில் சிக்கி
கண்ணீர் சமுத்திரத்தில்
சங்கமித்து வருகிறேன்...

ஒருவார்த்தை நீ
பேசுவாயென்றே நான்
ஒவ்வொரு நாளும் காத்திருந்தும் -- ஓயாத
நிலை ஒன்றில்
நான் ஒன்றுமில்லாமல் நிற்கிறேன்!!

ஒன்றுமில்லாமல்
நிற்பவன் -- உன்
விரல் தீண்டி வரமுடியாமலும் ! உன்னை
விட்டுக்கொடுக்க முடியாமலும்!!
நான் வேதனைபட்டு நிற்க
" நீ தான் வேண்டுமென்று"
எனை நீங்காமல்
"காத்திருக்கும் என் காதலே"

கனவுகள் கைசேரும் வரை
எதிர்காலங்கள் எனக்காக மாறும் வரை
காயங்களில் நின்று
கவலைகளை வென்று --நான்
வேண்டுமென்று
எனக்காக காத்திருப்பாயாjQuery1710610819746824818_1567401545529.....

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (17-Feb-19, 7:50 pm)
பார்வை : 1265

மேலே