ஆசை மச்சானே எங்கே

ஆசை மச்சான் தனியா ஏங்க வச்சான்
#############÷÷=÷==######

என்னை பிரிந்து நீண்ட நாளாச்சு
எண்ணியே மனசும் துடிச்சாச்சு
ஆசை மச்சான் தனியே ஏங்க போனிங்கள்
அந்தரமாய் வயிறும் வதைக்கிறது ஆசை மச்சானே
காரணத்தை யாரு கேட்பது மச்சானே
கடுமையா நெஞ்சம் பத்துதே
காக்க வைத்து உன் நினைப்பை
உள்ளம் வேண்டுதே ஆசை மச்சான்
நீ வராமல் போவதற்கு
உனக்கெதுந் தடையுளதோ. மச்சானே
வேரற்ற மரமாகி நோயுற்று போகிறேன்
வலி தீர்க்க வந்து போவான் மச்சானே
என் நிலை சொல்லியே புலர்கிறேன்
தூக்கமில்லா கண்ணைப்பார்த்து சிறையெடுத்து போ மச்சானே
உன் மீது கொண்ட நாட்டத்தால்
ஆசையுடன் வீசுதடா காதல் வாசம்
அரை நொடியென்றாலும் கனவில் வந்துபோ
அகிலன் ராஜா

எழுதியவர் : அகிலன் ராஜா (17-Feb-19, 9:35 pm)
Tanglish : aasai machane engae
பார்வை : 87

மேலே