தாஜ்மஹாலும் இவளும்

அது தாஜ்மஹால்
இவள் ஒரு தாயின் மகள்

அது ஷாஜகான்
கட்டி நினைத்தது
இவளை நான்
கட்ட நினைக்கிறேன்

அதுவும் வெள்ளை
இவளும் வெள்ளை

அது உலக அதிசயம்
இவளும் உலக அதிசயம்தான்

அதனைப் பார்க்கும்
கண்களுக்கு வேறெதுவும்
அழகாய் தெரிவதில்லை
இவளை பார்க்கும்
கண்கள் அழகாகிவிடுகிறது

அது இருபதாயிரம் பேர்
சேர்ந்து உருவாக்கிய மாளிகை
இவள் இரண்டே பேர் சேர்ந்து
உருவாக்கிய மல்லிகை

அது கல்லறை
இவளுக்கு கோபம்
வந்தால் கை அரை

அதை கட்டிய மேஸ்திரியின்
கட்டைவிரல் வெட்டப்பட்டதாம்
இவளின் கட்டை விரல் கண்டு
ரதி தேவியே வெட்கப்பட்டதாம்

அதன் நெஞ்சில் மும்தாஜ்
உறங்குகின்றாள்
இந்த மும்தாஜ் என்னை
உரங்கவிடாமல் செய்கின்றாள்

அது
ராஜஸ்தான் பளிங்கு
இவளைக் கண்டதும்
ராஜா கூட இலிக்கிறான்
பல் இங்கு

அது பாரத ஜனங்களின்
நினைவுச் சின்னம்
இவள் பாரதிய ஜனதாவின்
சின்னம்

எழுதியவர் : புதுவை குமார் (17-Feb-19, 9:58 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 246

மேலே