பொது கழிப்பிட விளம்பரம்

உடலை நினைத்து ஒவ்வாமை கொள்ளவும்
ஒருவாறான பயத்தை மனதில் ஆக்கவும்
எல்லோருக்கும் குறையே உள்ளது போலவும்
ஒருவித குழப்பத்தை உருவாக்கும் ஆயுதம்

ஆணுக்கு மட்டுமே அதித குறையும்
அகிலத்தில் நிறைய உள்ளது போலவும்
மூலம் பெளத்திரம் உறுப்பின் வளர்ச்சி
அணுவின் எழுச்சி ஆற்றலின் நெகிழ்ச்சி - என
அளாவாவும் இதன் கருத்து அனைத்துமே கேடு.

கண்டும் படித்தும் உள்வாங்கலின் போதும்
ஒன்றும் நமக்கில்லை என்று எண்ணிடல் நன்று
அழகாய் இதுவரை வாழ்ந்ததை எண்ணி
அவ்விட பணி முடித்து அகலுதல் சிறப்பு.
- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (18-Feb-19, 8:14 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 56

மேலே