காதல் கவலை

எனக்கென்றே
சில வருத்தங்கள்

என்னவன்
அலைபேசியிலிருந்து
எனக்கான
குறுஞ்செய்தி
வருவதில்லை

எனக்கான
அழைப்புகளின்
நேரங்கள்
சிலவினாடிகளே

முகநூல் பக்கத்தின்
என் பதிவுகள்
என்னவன்
விருப்பத்தைப்
பெறுவதில்லை

அவனுடைய
நேரத்தின்
பெரும்
பங்காற்றுவது
அவனது அலைபேசி

என் அழைப்புகளுக்கு
எனக்கான
அழைப்பொலி
என்று எதுவுமில்லை


அகிலா

எழுதியவர் : அகிலா (18-Feb-19, 12:42 pm)
சேர்த்தது : அகிலா
Tanglish : kaadhal kavalai
பார்வை : 141

மேலே