தாய்கவிதை - தாய்லாந்தை பற்றிய சிறுகவிதை

கவிதைகளில் இயற்கையை உவமைப்படுத்துவர்
இயற்கையே கவிதை பேசும் ஊரை என்ன சொல்ல?

பாலோவியமாய் மேகமும், நீள்நிற கடலும், பச்சிலம் மலையும் அழகிப்போட்டியில் ஆழ்ப்பறிக்கும்!

கடலை கிழித்து செல்லும் கப்பலின் முன்னின்று, மேகம் கடலில் மிதப்பதை பார்க்கையில்,
உப்புக்காற்று நம்மேல் நழுவிச்செல்லும், அக்கணம் கைவீசினால் சொர்க்கத்தின் கதைவை தாண்டி அதன் கொல்லைப்புற கதவையும் தட்டிவரலாம்!

இதற்குமேல் மக்கள், புதுமண தம்பதியர் போல ஊரே சிரித்த முகங்கள்.
பேராசை இல்லா நாக்குத்தவரா நாட்டுக்காரர்கள்.

நமக்கு முன் திருவள்ளுவர் முப்பாலில் மசாலாப்பால் போட்டு ஊட்டிவிட்டார் போலும் ஊர் முழுக்க அறம், பொருள், இன்பம் தான்.

"மரியாதைனா அது நாங்கதானுங்க" என்று மாறுதட்டிக்கொள்ளும் கொங்கு மக்கள் தோற்றுவிடுவார்கள் இவர்களிடம்.

நம்மஊர் சிடுமூஞ்சி ஆட்டோக்காரனிடம் பேரம் பேசி இருபது ரூபாய் குறைந்துவிட்டால் படையெடுத்து வென்றதுபோல் இருக்கும்.
அங்கோ,
சற்று விலையை குறைத்து கேட்டால் செல்லமாய் "கெனாட்" என்பார்கள்
மீறி கேட்டால் அன்போடு கொடுத்து விடுவார்கள்
வாங்கியப்பின் நமக்குத்தான் மனதில் சற்று சோகம் வருடும்

வீடு திரும்ப மணமின்றி, கையில் பணமின்றி, அரைமனத்தோடு கிளம்பும்போது திரும்பிப்பார்த்தால், “போய் வா” என்று
மெல்லச்சொல்லும் தாய்-லாண்டு!

மக்கள் இதைவிட்டு வேறு எதிர்பார்ப்பதோ வேடிக்கை!

எழுதியவர் : பிரசாந்த் (19-Feb-19, 6:40 am)
சேர்த்தது : Prasanth D
பார்வை : 173

மேலே