முருகன்-ஆண்டாள் சினிமாப் பாட்டுக்கு அன்றே எதிர்ப்பு---------------மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்குமுருகா

பலரும் வெறுத்த முருகன் பாட்டு! பல எதிர்ப்புகள் கிளம்பிய சினிமாப் பாட்டு!......என்ன முருகன் பாட்டின் மேல் வெறுப்பா?

ஆமாம்! அது முருகன்-முதலிரவுப் பாட்டு என்பதால்! :)
ச்சீ! தெய்வத்துக்கு முதலிரவா? அதை சினிமா வேறு எடுத்துக் காட்டுவதா?

பாடலின் வரிகளைப் பலருக்குப் பிடிக்கவில்லை! "காமம்" தூக்கலாக இருக்கும் பாட்டா முருகனுக்கு?
பாவம், என்ன செய்வார் கண்ணதாசன்? தோழி கோதையே துணை! அவள் "அன்புத் துணிவே துணை"!

ஆண்டாள் சொன்ன வரிகளை, அப்படியே ஆண்டார் பாட்டில்!
யார் வெறுத்தார்களோ, அதுவே பெரிய ஹிட்-ஆகி, படத்துக்கு சிறந்த இசையமைப்பாளர் விருதும் கிடைத்தது, சிறிது நாளில்!
அன்று பிடிக்காதவர்கள், இன்று புரிந்து கொண்டார்கள்! அன்று வெறுத்தவர்கள், இன்று விரும்பிக் கொண்டார்கள்! - முருகனருள்!

மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு...முருகா!

படம்: கந்தன் கருணை
குரல்: பி.சுசீலா
இசை: கே.வி.மகாதேவன்
வரி: கண்ணதாசன்



மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு - நான்
வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு!
(மனம் படைத்தேன்)

மத்தள மேளம் முரசொலிக்க
வரிசங்கம் நின்றாங்கே ஒலியிசைக்க
கைத்தலம் நான் பற்றக் கனவு கண்டேன் - அந்த
கனவுகள் நனவாக உறவு தந்தாய்!
(மனம் படைத்தேன்)

பள்ளியறையில் நான் தனித்திருந்தேன்
பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய்
துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன் - தோழீ
தூக்கத்தின் கனவென்று தான் உரைத்தாள்!
(மனம் படைத்தேன்)

செவ்வேள் என நீ பெயர் கொண்டாய்
சொல்வேல் கொண்டு நீ தமிழ் வென்றாய்
கைவேல் கொண்டு நீ பகை வென்றாய் - இரு
கண்வேல் கொண்டு நீ எனை வென்றாய்!
(மனம் படைத்தேன்)

சுசீலாம்மா, மிகவும் கிறங்கிப் பாடிய அழகிய பாடல்! அழகன் முருகன் பாடல்!

இந்தப் பாட்டு - தோழி கோதையின் கனவு போலவே அமைந்திருக்கும்! அப்படியே நினைத்து எழுதியதாக, கண்ணதாசன் பல பேட்டிகளில் சொல்வார்! = தோழீ, தூக்கத்தின் கனவென்று தான் உரைத்தாள்!

மத்தள ஓசையும் (தவில் ஓசை) நிறைய ஒலிக்கும் பாட்டில்!
* மத்தள மேளம் முரசொலிக்க, வரிசங்கம் நின்றாங்கே ஒலியிசைக்க = மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
* கைத்தலம் நான் பற்றக் கனவு கண்டேன் = கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்!

அன்று ஆவி காத்தது போல், இன்றும் ஆவி காத்து அருள்!
மனம் படைத்தேன்....உன்னையே நினைப்பதற்கு...முருகா!

Posted by Kannabiran, Ravi Shankar (KRS)

எழுதியவர் : (19-Feb-19, 9:10 pm)
பார்வை : 42

சிறந்த கட்டுரைகள்

மேலே