பேருந்துப் பயணம்

விரையும் ஒலியிலும் ஒரு நிசப்தம்..., 
முதலில் உரையாடலை துவங்குவது நீயா நானா என்ற வினவலா? 
இல்லை வார்த்தைகள் உன்னை கண்டதும் ஒளிந்து கொண்டதன் விரக்தியா? 
சற்று நேரத்தில் நம் ஒன்றான பயணம் இருவேறு சாலைகளில் என்ற வருத்தமா? 
அல்லது நீ வரும்வரை காத்திருக்கும் என் இமைகள் புன்னகையின் பொழுதுகளை தொலைத்துவிடும் தோரணையிலா? 
என் மனதும் கணக்கிறது.., 
நீண்டநாட்கள் பெய்து ஓய்ந்த மழைவானம் இன்று சட்டென தூரமாகிறது..! 
ஒன்றாய் நகரும் கார்மேகக் கூட்டம் இன்று தனித்தனியாய் சிதறிப்போகிறது...! 
இரட்டைத்தண்டவாளமாய் நாம் நகர..., 
மனதோ ஒற்றையடிப்பாதையாய்... 
உன் விழியின் ஒற்றைப் பார்வைகள், 
என்னோடு வந்துவிடு என உணர்த்த.., 
இதழ்கள் மட்டும் ஊமை நாடகமாய் அரங்கேர, 
வழியனுப்ப வந்த உன் கண்கள் சற்றே உன்னை மீறியும் இமைகளை விட்டு பொங்க.., 
நான் பார்க்கவில்லை என நினைத்து துடைத்துக்கொள்ள.., 
உன் உணர்வுகளை ஒரு குழந்தையாய் தூரத்தில் இரசித்துக் கொண்டிருந்தேன்...! 
ரயில் கிளம்ப , 
கண்ணீரை ஒளித்து, 
வெற்றுப் புன்னகையில் மனமில்லா மனதோடு வழியனுப்பும், 
உன் அன்பிற்க்கு நான் மழலையாய் 
மகிழ்ந்திடும் தருணங்களை இப்போது ஒவ்வொரு நொடிகளிலும் புத்தக பக்கங்களின் வாசகனாய் வாசிக்கிறேன்..! 
இதோ வந்துவிடுகிறேன்... என்னவளே.., 
உன் அன்றாட அழைப்புமணி அலாரமாய்... 
உன் செல்பேசியின் குறுஞ்செய்தியாய்..!

எழுதியவர் : சரண்யா (21-Feb-19, 7:26 pm)
சேர்த்தது : சரண்யா கவிமலர்
பார்வை : 136

மேலே