தமிழ் வாழ்த்து

தமிழ் வாழ்த்துப் பாடுவோர் எல்லாம்
தமிழை நேசிப்போரும் இல்லை/
தமிழ் வாழ்த்துப் போட மறுப்போர் எல்லாம் தமிழை வெறும் போரும் இல்லை /

தாய் தமிழ் பேச வெட்கப் படுவோரும்
தாயை முதியோர் இல்லம் விடுவோரும்
தாயை தெய்வமாய் துதிப்போரும்
தாய்க்குப் பின் தாரம் என்போரும் /

கலந்தே உலாவும் உலகம் இது/
கலப்படமே இருப்பிடமான உலகம் இது/
கண்ட படி பிறரைத் தூத்தாமல் /
கண்ணா நீ போடு தமிழ் வாழ்த்தை நல்லா /

தமிழை நேசிப்போருக்காகவும் /
தமிழச்சி நான் என்பதாலும்/
தமிழையே பேசி மகிழ்பவள் என்பதாலும் /
தமிழுக்கு நிகர் தமிழே என்று கூறி

வாழ்த்துப் பூக்களை தூவுகின்றேன்
தாய்த் தமிழுக்கு ஆதி மொழிக்கு என்
இனிய வாழ்த்துகள் 🌹🌹🌹❤🙏

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (21-Feb-19, 7:57 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : thamizh vaazthu
பார்வை : 97

மேலே