சொல்லாமல் செல்கின்ற என் நிகழ்க்காலம்

சொல்லாமல் செல்கின்ற என் நிகழ்க்காலம்
======================================

எதையோ தேடிக்கொண்டிருக்கிறேன்,
எதையென்று கேட்கிறாய்,
எதைச்சொல்வது ம்ம்,
எங்கும் அடைப்பிடாத
உன் அறையை
அலங்கரித்த வஸ்த்துகளில் எல்லாம்
உயிர் நிறைத்துவிட்டாய்ப்போல்,
இதத்தனையை
ஒன்றுசேர்த்தால் போலும்
அது மொத்தமும் நீ ஆகிவிடமாட்டாய்,
பஞ்சபூதங்களை ஒன்றுசேர்த்து
உன்னை சிருஷ்ட்டித்துவிட்டான்போல
ஆயிரம் சூரியர்கள் தேஜஸ்களாய்
உன் கண்களில்
நிறைந்திருந்தார்கள் ம்ம்,
ஆகாய அளவு அகல மனதையும்
நில அளவு உடைக்கமுடியாத
காம்பீரியத்தையும்
உன் அணிகலன்களாக்கிவிட்டான் போல்,
பிரபஞ்சபூக்களைப் பறித்து
உன் உதடுகள் செய்துவிட்டான்போல்,
அந்த சந்திரனுக்கு
மாதம் ஒரு பௌர்ணமிதான்
ஆனால் இவளோ
பிரதிநித்திய பௌர்ணமி ம்ம்
சற்று பொறு
இவற்றையெல்லாம்
என் கண்களில் நிரப்பிக்கொள்கிறேன்,
காற்றைத்திருடி
உன்றன் இடைமறைத்த
துப்பட்டா முந்தானையை
அதுவிலக்கியது என் பார்வைதான்,
உன் நாமாவளியை உச்சரிக்கச்செய்து
என் இளமைக்கு
ஆக்ரோஷங்களை கற்றுக்கொடுத்துவிட்டாய்
கிளைப்பற்றித் தொங்கிக்கொண்டிருக்கும்
குருவிக்கூட்டைப்போல
உன்னைப்பிடித்துவிட்ட எனக்கு
வேறெதிலும் இனி பிடிப்பிருக்கப்போவதில்லை ம்ம்,
எங்கோ எவ்விடமோ சிரித்தபடிநழுவுவது
அக்கற்றூணில்(கல் தூணில்)
பதிந்துவிட்ட சிலையா என்பதுபோல
நீ ஒளிந்துவிட்டு தேடவிடும் விளையாட்டுகளில்
என் ஏக்கங்களைத்தூவி
அடையாளம் செய்திருந்தேன் கண்டாயா,
நினைவில் பற்றிக்கொண்ட
நம் அணைப்பின் இறுக்கத்தை
தளர்த்திக்கொண்டுதான் இருக்கிறது
உன்னோடு
எதையும்
சொல்லாமல் செல்கின்ற என் நிகழ்க்காலம்,
அதை இப்படித்தான்
கிறுக்கிப்பார்த்து அழித்துக்கொண்டிருக்கிறேன் ம்ம்

"பூக்காரன்கவிதைகள்"

எழுதியவர் : அனுசரன் (23-Feb-19, 7:15 pm)
பார்வை : 446

மேலே