மகாகவி பாரதியார்

மகாகவி பாரதியார்

முண்டாசு கவிஞன் அவன்
முறுக்கு மீசை கவிஞன்அவன்
கண்களில் கம்பீரத்தை நித்தம் காட்டிய கவிஞன் அவன்
தேசத்தை நேசித்து தமிழை சுவாசித்து
மூன்று தமிழில் புகுந்து விளையாடிய மகா கவிஞன் அவன்
வறுமையில் வாடிய கவிஞன் அவன்
காதல் பாட்டு பல பாடிய
ரசனைமிக்க கவிஞன் அவன்
நாட்டு பற்றை மக்களிடையே நாடி நரம்பு அனைத்திலும் முறுக்கேற்றிய கவிஞன் அவன்
காந்தியை மகாத்மா என்று முதலில் அழைத்த தீர்க்கதரிசி கவிஞன் அவன்
பெண்ணியத்தை போற்றி எழுச்சி மிக்க பாடல்களை எழுதிய புதுமை கவிஞன் அவன்
பல மொழிகள் கற்ற திறமைமிக்க கவிஞன் அவன்
இயற்கையை ரசித்து ருசித்து பருகி பல கவிதை தந்த பலே கவிஞன் அவன்
பராசக்தியை வணங்கிய பக்தி மிக்க கவிஞன் அவன்
அனுதினமும் கண்ணம்மாவை மானசீகமாக காதலித்த
அற்புத கவிஞன் அவன்
ஆயிரம் வில்லியம் வோர்டுஸ்வர்த்க்கு இனையான கவிஞன் அவன்
அச்சமில்லை அச்சமில்லை உச்சி மீது வான் இடிந்து வீழ்ந்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே
என்று உணர்சி பொங்க பாடி
வீரம் ஊட்டிய மகாகவி அவன்
பார் முழுவதும் என்றும் அவன்
புகழ் பாட செய்த
மகாகவி பாரதி அவன் .

- பாலு.

எழுதியவர் : பாலு (25-Feb-19, 2:25 pm)
சேர்த்தது : balu
பார்வை : 93

மேலே