உலகச் சிந்தனை

இந்த உலகைப் பற்றி என்ன தெரியும் உனக்கு?
எதை எடுத்தாலும் கவர்ச்சி தேடும் உலகம் இது.
படத்தை பார்த்தாலும் கவர்ச்சி?
செய்தி தலைப்பைப் பார்த்தாலும் கவர்ச்சி?
ஆடையிலும், முகப்பாவனையிலும் எதிர்பார்க்கப்படும் கவர்ச்சி?
உங்களை நினைத்து உங்களுக்கு வரவில்லையா குற்ற உணர்ச்சி?

அட போடா டேய்! தெரியும்.
உண்மையை சிந்தித்தால் புரியும்.

விளம்பரக் கவர்ச்சியில் விற்பனையாகிறது வியாதிகளெல்லாம்.
வாங்கி ஊத்திக்கோ!
தின்ன சோறு செரிக்க ஒரு மருந்து.
செரிக்கப்பட்ட உணவு வெளியேற ஒரு மருந்து,
வெறியேறி மீண்டும் வயிறு பசிக்க ஒரு மருந்து,
எப்படி டேய்! எப்போ பார்த்தாலும் மருந்துகளோட தான் விருந்து.

அட போடா டேய்!
தெரியும்.
உண்மையை சிந்தித்தால் புரியும்.

பலவீனமானது உடம்பு, மேலும் பலவீனமானது இந்த உடம்பு,
ஓட முடியல!
ஓடுபவனைக் கண்டு வியந்து பார்க்கிறாய்.
நடக்க முடியல!
நடப்பவனை அதிசயமாகக் காண்கிறாய்.
சைக்கிள் மிதிக்க முடியல!
சைக்கிள் மிதிப்பதைப் பெரும் சாதனை என்கிறாய்.
மூளையின் பலத்தால் குறுக்கு வழி தேடுகிறாய்.
ஆனாலே உடலாலே இயலாமையில் வீழ்ந்துகிடக்கிறாய்.

அட போடா டேய்! தெரியும்.
உண்மையை சிந்தித்தால் புரியும்.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (25-Feb-19, 5:58 pm)
பார்வை : 1276

மேலே