பள்ளிக்கூடப் பிரார்ததனைப் பாடலாக மாறிய ஒரு திரைப்படப் பாடல்

ஒரு திரைப்படப் பாடல் பள்ளிக்கூடங்களில் பிரார்த்தனைக்குரிய பாடலாக ஆனது என்றால் நம்ப முடியவில்லை அல்லவா?

இங்கு இந்தியாவில் மட்டுமல்ல, பாகிஸ்தானிலும் கூட பள்ளிக்கூடங்களில் பிரார்த்தனைப் பாடலாக ஆனது அந்தப் பாடல்.

இந்தப் பெருமைக்குரிய பாடல் :

ஐ மாலிக் தேரே பந்தே ஹம்

ஐந்து நிமிடம் 33 விநாடிகள் நீடிக்கும் இந்தப் பாடலை இன்றும்

11,786,116 பேர்கள் இதுவரை இதை கேட்டிருக்கிறார்கள்; இன்னும் கேட்பார்கள். (AS on 26-2-19)

பாடல் இடம் பெறும் படம் :தோ ஆங்கே பாரா ஹாத்

இரு கண்களும் பன்னிரெண்டு கரங்களும்.

படத்தை இயக்கியவர் பிரபல டைரக்டரான வி.சாந்தாராம் அவர்கள்.

படம் வெளியான ஆண்டு 1957. பெரும் வெற்றியைப் பெற்ற இந்தப் படத்தில் சாந்தாராம் ஆதிநாத் என்ற ஜெயில் வார்டனாக நடித்தார். ஒபன் ஜெயில் என்னும் திறந்த வெளிச் சிறைச்சாலை முறையை சதாரா அருகில் உள்ள அவுந்த் ராஜ்யம் பரிசோதித்துப் பார்த்தது. அதன் அடிப்ப்டையில் உத்வேகம் பெற்று இந்தக் கதை படமாக்கப்பட்டது.

ஆறு பயங்கரமான கிரிமினல்களை இளம் வார்டன் தன் பொறுப்பில் அழைத்துச் சென்று மாற்ற முயல்கிறார்.

அவர் கடைசியில் ஒரு எதிரியால் கொல்லப்பட்டு இறக்கிறார்.

பரத் வ்யாஸ் அற்புதமான பாடலை எழுத, வசந்த் தேசாய் இசை அமைக்க லதா மங்கேஷ்கர் பாட உளத்தை உருக்கும் ஒரு பாடலாக படத்தின் இறுதியில் அமைகிறது ஐ மாலிக் தேரே பந்தே ஹம் பாடல்!

Aye Maalik Tere Bande Hum

Ayese Ho Humaare Karam
nekee Par Chale, Aaur Badee Se Tale,

Taankee Hasate Huye Nikale Dam

ye Andheraa Ghanaa Chhaa Rahaa,

Teraa Insaan Ghabaraa Rahaa
ho Rahaa Bekhabar, Kuchh Naa Aataa Najar,

Sukh Kaa Sooraj Chhoopaa Jaa Rahaa
hai Teree Roshanee Mein Jo Dam

To Amaawas Ko Kar De Poonam

badaa Kamajor Hain Aadamee,

Abhee Laakhon Hain Is Mein Kamee
par Too Jo Khadaa, Hain Dayaaloo Badaa,

Teree Kirapaa Se Dharatee Thamee
diyaa Toone Humei Jab Janam Too Hee Zelegaa Hum Sab Ke Gam

jab Julmon Kaa Ho Saamanaa,

Tab Too Hee Humei Thaamanaa
wo Buraee Kare,

Hum Bhalaaee Bhare, Naheen Badale Kee Ho Kaamanaa
badh Uthhe Pyaar Kaa Har Kadam Aaur Mite Bair Kaa Ye Bharam

ஓ, கடவுளே நாங்கள் உனது மக்கள்.

ஓ, கடவுளே நாங்கள் உனது மக்கள்.

தீமையிலிருந்து விலகி இருந்து

நல்ல பாதையில் நடக்கும் படியாக எங்களின் விதியை அமை.

சிரித்துக் கொண்டே இருக்கும் போது இறுதி மூச்சை விடுவோமாக!

இதோ இப்போது இருப்பது காரிருள்.

உனது மனிதன் பயந்திருக்கிறான்,

பொறுமையற்றவனாக இருக்கிறான், பார்க்க ஒன்றும் இல்லை, பொறுமை குறைகிறது.

உனது ஒளி மிக்க சக்தி வாய்ந்தது. இருளான் இரவை ஒளி மயமாக்க வல்லது

மக்களோ மிகவும் பலஹீனமாக உள்ளனர்.

அவர்கள் குறைபாடுள்ளவர்களாக இருக்கின்றனர்

ஆனால் நீயோ கடவுள்

பூமியே உனது ஆணையால் சுழல்கிறது.

நீ எங்களுக்கு உயிரை ஈந்த போதிலேயே நீயே எங்கள் வலியை எடுத்துக் கொள்ளவும் பொறுப்பாளி ஆகிறாய்!

எங்கு பார்த்தாலும் கொடுமை இருக்கும் போது, நீயே எங்களைக் காப்பாற்ற வல்லவனாகிறாய்!

நாங்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்த போதிலும் அவர்கள்

தீமையை விளைவிக்கின்றனர். நிலைமை மாறாது.

அன்பை ஒவ்வொரு அடியிலும் எழச் செய்வோம்!

Ohh God, we are your people
Ohh God, we are your people, make our destiny
so we walk on good path, stay away from bad, we breathe our last while laughing.
it is now becoming pitch dark, your human is becoming scared
becoming very impatient, nothing to see, sun of patience is going down
Your light is so powerful, can light the dark night

People are very weak, They are so imperfect
But you are God, The earth moves on your order
When you brought us to life, it made you responsible to also take our pain

When cruelty is everywhere, Then you become our only savior
They do bad, doesn’t matter how good we are, things will not change
Let’s raise the feet of Love.

நல்லதை நினைத்து நல்லதையே செய்யும் போது நன்மையே விளையும் என்ற அறநெறிப் பண்பை விளக்க வந்த படம் தோ ஆங்கே பாரா ஹாத்.

அதில் அமைந்துள்ள இந்தப் பாடலை அந்தக் கால ஆசிரியர்கள் பள்ளிக்கூட பிரார்த்தனைப் பாடலாக அமைத்து மகிழ்ந்தனர்.

அதைப் பாடிய அந்தக் கால குழந்தைகள் இன்று முதியவர்கள்!

அவர்கள் பழைய காலத்தை நினைத்து இணையதளத்தில் ப்திவிடும்போது ப்ரவசத்துடன் பழைய காலத்தை நினைத்து மகிழ்கின்றனர்.

திரைப்படப் பாடல் ஒன்று பிரார்த்தனை கீதமாக ஆன கதை இந்தியத் திரைப்பட வரலாற்றில் இதுவே முதல் முறை; இன்னும் வேறு ஒரு பாடலும் இப்படி ஒரு வெற்றியைப் பெறவில்லை!

ஓ, கடவுளே நாங்கள் உனது மக்கள்.

ஓ, கடவுளே நாங்கள் உனது மக்கள்.

தீமையிலிருந்து விலகி இருந்து

நல்ல பாதையில் நடக்கும் படியாக எங்களின் விதியை அமை.

***


பகிர வேண்டுகிறேன்
ச.நாகராஜன்

எழுதியவர் : (26-Feb-19, 2:50 pm)
பார்வை : 48

சிறந்த கட்டுரைகள்

மேலே