அன்பிங்கு இல்லானுக்கு இடம்பொருள் ஏவல் என்செய்யும் – நன்னெறி 15

இருவிகற்ப நேரிசை வெண்பா

இல்லானுக்(கு) அன்பிங்(கு) இடம்பொருள் ஏவல்மற்(று)
எல்லாம் இருந்துமவற்(கு) என்செய்யும் - நல்லாய்!
மொழியிலார்க்(கு) ஏது முதுநூல் தெரியும்
விழியிலார்க்(கு) ஏது விளக்கு. 15 – நன்னெறி

பொருளுரை:

நற்குணமுடையவளே! பேச்சில்லாதவராகிய ஊமைகளுக்குப் பழைமையாகிய நூல் யாது பயனைச் செய்யும்?

பார்க்கின்ற கண்ணில்லாதவராகிய குருடருக்குத் தீபம் யாது பயனைச் செய்யும்?

அதுபோல, இவ்வுலகத்தில் அன்பில்லாதவனுக்கு இடமும் பொருளும் ஏவலுமாகிய இவை எல்லாம் இருந்தும் அவனுக்கு யாது பயனைச் செய்யும்? ஒரு பயனுஞ் செய்யாது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Feb-19, 9:33 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

மேலே