இருநீர் வியன்உலகம் வன்சொலால் என்றும் மகிழாதே – நன்னெறி 18

இருவிகற்ப நேரிசை வெண்பா

இன்சொலால் அன்றி இருநீர் வியன்உலகம்
வன்சொலால் என்றும் மகிழாதே - பொன்செய்
அதிர்வளையாய்! பொங்கா(து) அழல்கதிரால் தண்என்
கதிர்வரவால் பொங்கும் கடல். 18 - நன்னெறி

பொருளுரை:

பொன்னாலே செய்யப்பட்ட ஒலிக்கின்ற வளையல்களை உடையவளே!

கடலானது குளிர்ச்சி பொருந்திய கிரணங்களை உடைய சந்திரன் வருகையினால் பொங்கும்;

அதுவன்றி, வெம்மை பொருந்திய கிரணங்களை உடைய சூரியன் வருகையினாலே பொங்காது.

அதுபோல, பெரிய கடல் சூழ்ந்த பரந்த உலகத்திலுள்ளவர்கள், இன்சொலால் அன்றி வன்சொலால் என்றும் மகிழாது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Feb-19, 12:52 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 53

மேலே