நெஞ்சம் விரும்பவில்லை

கூவி அழைத்தேன்
எதிர்க் குரல் கொடுக்கவில்லை /
கூட்டத்தில் சந்தித்தேன்
நேருக்கு நேர் பார்க்கவில்லை /

பசியோடு அமர்ந்திருந்தேன்
உணவு உண்ண அழைக்கவில்லை/
பழங்கதைகளை பேசி மகிழ்ந்தேன்
செவி கொடுத்துக் கேட்கவில்லை /

துன்பத்தில் விழுந்து துடித்தேன்
தோள் கொடுக்கவில்லை /
துயரத்தில் மாட்டித் துடித்தேன்
கரம் கொடுத்துக் காப்பாற்றவில்லை /

நோயில் சிக்குண்டு தவித்தேன்
ஆறுதல் வார்த்தை பிறக்கவில்லை /
நோவுற்ற மனசுக்கு ஒத்தனம்
போல் சொல் கிடைக்கவில்லை /

கவலை வழி மூடவும் இல்லை /
கண்ணீர்த்
துளிக்கு விடுதலையுமில்லை/
ஆத்மாவுக்கு எத்தனையோ தொல்லை/
அதனாலே மனசுக்கு நிம்மதியுமில்லை/

மோசம் ஒன்றும்
நான் பண்ணவில்லை/
நேசமதை
என்றென்றும் கொல்லவில்லை/

பாசத்தை பங்கிட்டேன்
நீ பகிர்ந்து கொள்ளவில்லை /
பாசனத்தை நான் கையில்
எடுத்தேன் அருந்த முடியவில்லை /

வருந்தி தவித்தாலும் விசம்
அருந்தி மடிந்து உன்னை
மறக்க நெஞ்சம் விரும்பவில்லை /



படம் கொடுத்த கற்பனை

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (28-Feb-19, 7:57 pm)
பார்வை : 69

மேலே