மதுரமான பக்தியிசை மெட்டுப்பாடல்கள் அன்னைக்கு காணிக்கை

1 தாமரைப் பூவில் அமர்ந்தவளே- மெட்டு
தாமரைப் பூவில் அமர்த்தி உன்னை
செந்தூரத் திலகமிட்டு மகிழ்வேன் நான் (செந்தாமரை)

சிந்தையில் என்னாளும் நின்றிடும் தாயே
சிறந்தவளே கருணையைப் பொழிந்தவளே(செ)

அலைமகள் கலைமகள் மலைமகள் நீயே...
அனைத்திலும் நீயேதான் எந்தன் அம்மா...
அனுதினம் போற்றி உன்னை வழிபடுவேன் நான்
அணைத்தென்னைக் காத்தே அருள்புரிவாய்(செ)
--------------------
2 இதயத்தில் கோவில் கட்டிவைத்தேன்

அம்மா நீ வரவேண்டும்
உள்ளத்தால் பாடுகின்றேன்
அம்மா நீ வரவேண்டும் அம்மா நீ வரவேண்டும்

அன்னையைப் புகழாத வாயில்லை –அவள்
அன்புக்குப் பணியாத இதயம் இல்லை
எத்திக்கும் அவள் புகழில் களங்கமில்லை
என்றைக்கும் அவள் இருக்க கலக்கமில்லை(2)(இ)

தடுமாறி இருப்போர்க்கு துணை நீயம்மா
தடம் மாறிப் போவோர்க்கு வழிநீயம்மா
இடம் மாறிச் சென்றாலும் நீதானம்மா
அருள் வாரித் தரவேண்டும் தாயே அம்மா(இத)
------------------------
3. ஐயமே இல்லாது உன்னையே தொழுவோர்க்கு
அருள் வந்து கூடுவதும் மெய்யம்மா...(2)

உன்பாடல் தனைப்பாட தினம் தினம் இன்பமே
நீ கேட்டு மகிழ்வாய் தினம் அம்மா.......
உன் திரு நாமத்தை உரைத்திடும் வேளையில்
ஒவ்வொரு வார்த்தையும் தேனம்மா(2) (ஐ)

நீ வாழும் இடம் கோவில் நீயே தான் என் தெய்வம்
நினைவினில் இனிப்பதும் நீயம்மா(2)
உன் பாத மலர் தன்னை தினம் போற்றித்
தொழுவார்கள் உயர்வாழ்வு பெறுவதும் மெய்யம்மா(2
அன்னையே.... சரணம் அன்னையே (3)
-------------------------
4. கருணை என்னும் அமுது படைக்கும்
கலியுக தெய்வம் என் அன்னையே.....
உன் திருவடி மலரைத் தொழுதால் மகிழ்வாய்
அருளைப் பொழிவாய் பாசம் மேலிட.....(கரு)

பரிமளப் பூங்கொடி அன்னை உந்தன்
பதமலர் பணிந்தே பாடிடுவேன்
இருவிழியாலே அருளைத் தந்தே
என்றும் எம்மைக் காத்திடுவாய்
சக்தி வடிவமாய்த் திகழ்ந்தே நீயே
நலம் பல செய்திடுவாய்....
வழிகாட்டும் ஜோதி நீயே....
வளம் சேர்க்கும் தெய்வம் நீயே...(கரு)

சமயத்தில் வந்தே காத்திடுவாய்
சங்கடம் தன்னைப் போக்கிடுவாய்
சர்வ வியாபியாய் எங்கும் திகழ்ந்தே
சர்வ மங்களம் அருளிடுவாய்..
சரணம் அம்மா என்றே பணிவோம்
உன் மலர் பாதங்களை
கருணாகரி அம்மா.... காருண்ய தெய்வம் நீயே..(க)
------------------
5. சொல்லாத நாளில்லை சுடர்மிகும் என் தாயே
சுவையான அமுதே செந்தமிழாலே..... – உன்னை

கண்ணான தாயே உன் புகழ்மொழி பாடி நிதம்
கழல் தன்னைப் போற்றி என்றும்
புகழாரம் சூட்டி உன்னை (சொ)

இன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்விலே
இணையில்லா உன் திரு புகழினை நான் பாட
அன்பும் அறநெறியும் அகமும் புறமும் நாட
அனுதினம் பற்பல பாடல்கள் பாடி
அகமகிழ்ந்துன்புகழ் மொழிதன்னைக் கூறியே (சொ)
-----------------------
6. நான் பாடும் முதல் பாடல் உன் பாடலே
எனை நாள்தோறும் பாடவைக்கும்
நாயகியே... என் தாய் நீயே.......

வேதங்கள் யாவுமே உன் புகழ் போற்றும் –அதன்
விளக்கங்கள் எல்லாய்ம் உன்னையே வாழ்த்தும்
விரைவினில் மனம் கனியும் தாய் நீயே....- எழில்
விமலையே... கமலையே... எமைக்காப்பாய்...(நா)

பெற்றவளே உன் புகழ் பாட.. – பல
பண்ணிசைத்தேன் தினம் பைந்தமிழில்
பரிவுடன் கேட்டருள் பரிமளமே – என்
பாமாலை உனக்கே தான் என்றென்றுமே..(நான்)

வினைகளை அகற்றிடும் தாய் நீயே...
என்றும் பேரருள் புரிந்து நலம் அருளிடுவாய்
அனுதினம் உன்பத மலர்தனையே...
அன்போடு போற்றிடுவேன் உன் சேய் நான்(நான்)
--------------------------
7/ பூபாள ராகத்தில் உன் புகழைப் பாடிட - மெட்டு
பூபாள ராகத்தில் உன் புகழைப் பாடிட
எழுக என்று சேவல் குரல் அழைக்குது
அது அம்மா உன் திருப்புகழாய் ஒலிக்குது

உன் அருளைப் பெற்றிட எந்தன் மனம் நாடுதே
இன்னருளைத் தந்திடுவாய் தாயே........
அம்மா உன் புகழ் தன்னை நாள்தோறும் போற்றிட
அன்புடனே ஓடிவந்தேன் நானே........(இரண்டு முறை)(பூபாள)

சங்கத் தமிழ் தேனால் பொங்கும் இசை எழுப்பி
நாள்தோறும் பாடிடுவேன் நானே................
நாவாறப் பாடும் எங்களைக் காத்தே
நாயகியே நீயருள் புரிவாய்.................(இரண்டு முறை) (பூபாள)

ஆறுதலைத் தேடும் அன்புமனம் யாவும்
பாடுவது உந்தன் புகழ் தானே.............
அம்மா எம்மைக் காத்தே அருளாசி செய்திட
அனுதினமும் அருள்புரிவாய் தாயே..........(இரண்டு முறை) (பூபாள)

(திருப்புகழ்)

பாதார விந்தங்கள் பணிந்தேன் எனைக் காப்பாய்
ஆதாரம் எனக்கென்றும் நீயே அம்மா
வேதாகமங்கள் உனைப்போற்றி நிற்குமே
மாதா நீயே எனைக் காத்தருள்வாய்

(அம்மா உன் திருப்புகழாய் ஒலிக்குது.................)
---------------------------

8. கருமாரி உன் பதமே – மெட்டு
என் தாயே உன் புகழை நாள்தோறும் போற்றிடுவேன்
பந்தமிழ்ச் சரம் எடுத்து பாமாலை இசைத்திடுவேன்(எ

கார்மேக முகிலாகி கருணை மழைப் பொழிபவளே
கருணையோடனுதினமும் அன்புடனே காப்பவளே..
நல்லறங்கள் பல சேர்த்து நலம் யாவும் தருபவளே
நாயகியே உந்தன் பதம் நம்பி வந்தேன் நானம்மா(எ)

பூமாலை சூட்டி தினம் பாமாலை இசத்திடுவேன்
தாயே நீ கேட்டதனை மகிழ்வோடு ஏற்றருள்வாய்
காலமெல்லாம் எமைக் காக்க கனிவுள்ளம் கொண்டவளே...
காலடியைப் பணிந்து நின்றேன்....
காவல் தந்து காத்தருள்வாய்....(என்)

வேதனைகள் யாவும் தினம் வெந்தழியும் உன்னருளால்
வேண்டும் வரம் தந்தருள
எந்தன் அன்னை நீயிருந்தே
விரைவினிலே காத்திடுவாய்
வெற்றி எதிலும் நல்கிடுவாய்
வேண்டிடுவேன் உன் பதமே விரைந்திங்கு வந்தருள்வாய் (என்)
-----------------------
9.. கலைவாணி நின் கருணை – மெட்டு
என் தாயே உன் புகழைப் பாடிடவே
தினம் தோறும் நான் வேண்டித் தொழுவேனே
அலங்காரச் சொற்களிலே பண்ணிசைத்து
அம்முன் புகழ்பாடி மகிழ்வேன் நான்(என்)

மலர் முகம் கொண்ட என் அன்னை உன்னை
மனதாலே பாடிதினம் மகிழ்வேன் நான்
ஸ்ருதியோடு லயபாவ ஸ்வர ராகம் இசைத்து
என் மாதா உன்னை வாழ்த்திடுவேன் நான்(என்)

வீணையில் ஸ்வரம் மீட்டிப் பண்ணிசைத்தே
விமலையே உனை நானே வாழ்த்திடுவேன்
கழல் போற்றிப் பணிகின்ற அன்பர் தம்மை
கரம் நீட்டிக் காத்தருளும் தாய் நீயே... (என்)
----------------------
10. தாயே கருமாரி – மெட்டு
தாயே வருவாயே எந்தன் தாயே வருவாயே
நீயே என் தெய்வம் என்னைக் காப்பாய் நாள்தோறும் (தாயே)

அன்னை உந்தன் மலரடியை அனுதினம் போற்றிப் பரவிடுவேன்
அம்மா உந்தன் புகழ்பாடி அனுதினமும் வணங்கிடுவேன்(தாயே)

சிந்தனையில் நீயிருந்தே செம்மையுறக் காத்திடுவாய்
நன்மைபல நான்புரிய நாள்தோறும் அருள்புரிவாய் (தாயே)
---------------------
11. அருளான அன்பான அம்மாவும் நீ
அறமான நல்வாழ்வு தருவாய் நீ
திருவாகி உருவாகி வந்தாய் நீயே
கருவாக என்னையே காத்தாய் நீயே...

உன்னையே தினம் நாங்கள் தொழுதேத்துவோம்
உனையன்றி யாருக்கும் சிரம் தாழ்த்திடோம்
நல்லோர்கள் நெறிமார்கள் தினம் வாழவே
நலமான அருளைச் செய் அம்மா நீயே (அ)

பொல்லாத தீவினையைத் தூளாக்குவாய்
பொறையுடைமக் கொண்டே பல அறம் செய்குவாய்
அழியாத பேரோடும் புகழோடுமே
அனுதினமும் வாழ்ந்திடவே அருள்வாயம்மா (அ)
----------------------------
12. உள்ளத்திலே கோவில் கட்டி
உன்னை அங்கு குடிவைத்தேனே
எண்ணத்திலே தொட்டில் கட்டி
என் அன்னையே தாலாட்டினேன்

கருணையோடு காத்திடம்மா
கவலையாவும் போக்கிடம்மா
என்றும் எங்கும் எப்பொழுதும்
பக்கத்துணை நீயிரம்மா

தத்திம்மி தோமென்று ஆடி உன்னைப் போற்றுவேன்
தஞ்சமென உன்பாதம் சரணடைய வந்திடுவேன்
தகதகிட தகதகிட என்றாடி வாழ்த்துவேன்...
தயையுடன் என்னை நீ காத்தருள் செய்திடு
தத்தஜம் த்கதஜம் என்றாடி வேண்டுவேன்....
தத்துவப் பொருளான வித்தகி உன்னையே
அன்னையே... கேளம்மா....
என்னையே..... பாரம்மா....(உள்ளத்)
---------------------
13. அழகிய மயிலே அபிராமி – மெட்டு
மங்கள நாயகியே மனம் கனிந்து அருள்செய்யம்மா
மன் நிறைந்த என் தாயே மகிழ்வோடு காத்திடம்மா
அன்புடன் ஆயிரம் பண்ணிசைத்தே பாடிடுவேன்
அதை எந்நாளும் கேட்டே அருள்வாய் நீயம்மா

அழகிய மயிலே என் அம்மா
அஞ்சுக மொழியே என் தாயே
ஆறு பொழுதும் உனைத் துதித்தேன்
ஆனந்தம் பெற்றே நான் உயர்வேன் (அ)

இன்னமுதம் நீ என் அம்மா
ஈடு இணையற்ற தாய் நீயே
உன் பதம் சரணம் என் அன்னையே
ஊழ்வினைத் தவிர்ப்பாய் நீயம்மா(அ)

என் மனம் அறிவாய் நீயம்மா
ஏன் பயம் என்பாய் நீயென்றும்
ஐம்புலனால் உன்னைப் போற்றி நின்றேன்
ஐயமின்றி நான் உனைப் பணிவேன்

ஒன்பது மணியே என் அம்மா
ஓங்கார இசையே என் அம்மா
ஔடதமாய் நீ எனைக் காப்பாய்
ஔவைப் போல் கவிப்பாடி உனைப்புகழ்வேன் (அ)
----------------------
14. பழனி என்னும் ஊரிலே – மெட்டு
அன்னை என்ற பேரிலே அன்பு கொண்டு விளங்கிடும்
இன்பமய ஜோதியே ஈடு இல்லா தெய்வமே- அம்மா(ஈ

பாசம் மிகவும் கொண்டென்னை
பாரில் நீயே பேணி நின்றாய்
பண்பு அன்பு கருணையுடன்
நாளும் நாளும் காத்து நின்றாய்
பலனெதுவும் பாராமல் பரிவுடனே வளர்த்திட்டாய்
பங்கஜ மலர் கண்களிலே
கருணைகொண்டே காத்து நின்றாய் –அம்மா (2)

சரணடைந்தேன் தஞ்சமென
உந்தன் மலர்ப் பதங்களை நான்
சாந்த மய ஜோதி நீயே சங்கடங்கள் மாய்த்திடுவாய்
சடுதியிலே காத்திடுவாய் சஞ்சலங்கள் போக்கிடுவாய்
சகலமுமாய் எனக்கமைந்த அன்னை நீயே
வந்தருள்வாய் –அம்மா
----------------------------
15. தெய்வமே அன்பு தெய்வமே
கருணை கொண்ட தெய்வமே
காவல் எனக்கு நீயன்றோ (தெய்)
மூவுலகோர் போற்றுகின்ற அன்னையே
எந்தன் அன்னையே
ஆறுபொழுதும் உன்னைப் பணிந்தே
போற்றுவேன் தினம் போற்றுவேன்
ஏழுலகும் உந்தன் புகழை வாழ்த்தியே
புகழ் பாடுதே
தாள்கள் இரண்டும் துணை எனக்கு
தலை வணங்கி வாழ்த்துவேன் (தெய்)

நீயிருக்கும் கோவில் எந்தன் உள்ளமே
எந்தன் உள்ளமே
கோல மலர்விழி இரண்டும் என்றும் காவலே
எந்தன் காவலே
காலம் முழுதும் போற்றிப் பணிவேன்
உன்னையே எந்தன் அன்னையே
சீலம் மிகுந்திடும் உந்தன் புகழினைப்
போற்றியே தினம் வாழ்த்துவேன் (தெ)
---------------------------------
16. நாயகனைப் பாட நான் என்ன தவம் –மெட்டு
அன்னை உன்னைப் பாட நான்
என்ன தவம் செய்தேன் –எந்தன்
தாயே உன்னைப் போற்றிடவே
நான் என்ன தவம் செய்தேன்

மூவடிவ சக்தி நீயே முதற்பொருளே எந்தன் அம்மா
முப்பொழுதும் உன்னைப் போற்றி
எப்பொழுதும் பாட்டிசைப்பேன் (அன்னை)
அரவணைத்து அன்புடனே எனை நீயேக்
காத்து நின்றாய்
துதிப்பபாடி உன்புகழை தினம் போற்றி மகிழ்ந்திடுவேன்
சிரிக்கின்ற சிரிப்பினிலே
செல்வமெல்லாம் தருபவளே
சிந்தையிலே நிறைபவளே
எந்தன் மனம் மகிழ்ந்திடவே(அ)

சதங்கை மணி ஒலித்திடவே
சங்கீதம் இசைப்பயில
சரண பாத மலர்களிலே சப்த தாளம் கேட்குதம்மா
சர்வ மங்களம் கூடுதம்மா
சாந்தமய ஜோதி உன்னால்
சாதனை பல பிறக்குதம்மா
சோதனைகள் மறையுதம்மா(அ)
----------------------------
17. வரவேண்டும் வரவேண்டும் தாயே....
ஓரு வரம் தரவேண்டும் தரவேண்டும் நீயே
அம்மா (வர)

அறம் வளக்கும் அம்மா எனதன்புத் தாய் நீ
என்றென்றும் காத்தருள்வாய் உனதன்பு சேயை(வர)

தான் எனும் அகந்தை தலைக்கு ஏறாமல்
தாழ்ந்த நிலையிலும் தர்மம் மாறாமல்
வான்புகழ் வள்ளுவன் வகுத்த நல் வழியுள்
நாளெல்லாம் வாழ்ந்திட வரமருள் தாயே(வ)

18. அழகென்ற சொல்லுக்கு முருகா மெட்டு
ஹம்மிங்

அம்மா.............. அம்மா................அம்மா..........

அருளென்ற சொல்லுக்கு அம்மா......
உன் அருளன்றி உலகிலே புகலேது அம்மா.....(அருள்)

சுடரான தியாகமைய ஜோதி..............உந்தன்
கழல் போற்றி பணிகின்ற எம்மை நீயே காப்பாய்(சுடரான)
கருணை மழை பொழிந்து நாளும் அருள்வாய்........(இரண்டு முறை)
எந்தன் கண்கண்ட தெய்வமே கருணாமய தீபமே ........(அருள்)

அன்பிற்கு எல்லையோ அம்மா...... உந்தன்
அருளுக்கு எல்லை தான் இல்லையே அம்மா
வேண்டி உந்தன் பாதம் தனை தொழுவேன் (இரண்டு முறை)
எங்கள் வேதனைகள் மாய்த்து நலம்
சேர்த்திடுவாய் அம்மா......(அருள்)

குமுதவிழி திறந்து அருள் புரிவாய்...............எமக்கு
அமுதமொழி கூறி நல் ஆறுதலைத் தருவாய்..........(குமுத)
எமது இதய தெய்வமே.... தாயே...............(இரண்டு முறை).என்றும்
தவறாது அருள் மழைப் பொழிந்திடுவாய் அம்மா.............. (அருள்)

பிரணவப் பொருள் உன்னையே போற்றும்....
உந்தன் பதமலரைப் பணிந்து புகழ் பாடியே ஏத்தும் ....................(பிரணவப்)
மூவடிவ சக்தி நீயே வருவாய்.................(இரண்டு முறை).
என்றும் மூவர் தேவர் யாவருமே போற்றும் எழில் தாயே...................(அருள்)
-------------------------
19 (ஏறிவரக் கால் நோகுதே....... நீ இறங்கி வந்து அருள் செய்யப்பா............. என்ற முருகன் பாடல் மெட்டு ( புஷ்பவனம் குப்புசாமி பாடியது)
அம்மா.............
பைந்தமிழ் தேன் சொல்லெடுத்து பல
பாக்கள் இசைத்து உன்னை என்றும்
பாடிப் பாடி போற்றி வந்தேன் உந்தன்
பத மலரை எண்ணி எண்ணியே............

பாசம் மிகுந்த எந்தன் தெய்வமே நீ
நேசம் உடன் எம்மைக் காப்பாய்
வாசம் மிகு மலர் தன்னால் பல
வாசம் மிகு மலர் தன்னால் மணம்
வீசும் உன்மலர் பாதம் பணிந்தேன்

அஞ்சல் என்று நாளும் காப்பாய் உன்னை
கெஞ்சி வழி பாடும் என்னை
நெஞ்சுருக வேண்டி நின்றேன்.... அம்மா
நெஞ்சுருக வேண்டி நின்றேன் என்
கொஞ்சும் தமிழ் பாடல் கேட்ப்பாய்

இருக்கும் இடம் தன்னை விட்டு
என்றும் அகலாது இருப்பாய்.............. நான்
இருக்கும் இடம் தன்னை விட்டு......... நீ
என்றும் அகலாது இருப்பாய்

விருப்பு வெறுப்பு ஏதும் இன்றி
பல பொறுப்புடனே என்னைக் காத்தாய்.. (பைன்
------------------------20/ உன்னைத்தான் பாடவந்தேன் மெட்டு
உன்னைத்தான் பாடவந்தேன்
எந்தன் அன்பு அன்னையம்மா
உன்னைக் கண்டு மனம் மகிழ்ந்தேன்
என்ன சொல்லி பாடுவதோ.....
ஒ.......ஒ...........என்ன சொல்லி பாடுவதோ?

மூஉலகை காத்து நிற்கும்
எழில்மேவும் தெய்வம் நீயே.....
மூவர் தேவர் யாவருமே..........
போற்றும் எழில் தெய்வம் நீயே..............

முன்னின்று காத்தருளும்
முழு முதல் தெய்வம் நீயே..............
உன்னைக் கண்டு மனம் மகிழ்ந்தேன்
என்ன சொல்லி பாடுவதோ.....
ஒ.......ஒ...........என்ன சொல்லி பாடுவதோ?

பைந்தமிழ்த் தேன் சொல்லெடுத்து
பதமலரைப் போற்றி நின்றேன் ......
பாசம் மிகும் எந்தன் தெய்வம் .........
பாரில் நீயே............... என்றும் அம்மா.....
பரிவுடனே......நாளும் எம்மை........
பண்புடனே காத்தனையே.......
உன்னைக் கண்டு மனம் மகிழ்ந்தேன்
என்ன சொல்லி பாடுவதோ.....
ஒ.......ஒ...........என்ன சொல்லி பாடுவதோ?
-------------------
21. சுட்ட திரு நீரெடுத்து- மெட்டு
அன்னை உன்னைப் பாடிடவே அன்புடனே
ஓடிவந்தேன்
அருள்தந்து ஆட்கொள்ள வருவாய்
இன்பமய ஜோதி நீயே இன்னல்
எல்லாம் தீர்த்திடுவாய்
ஈடுஇணையில்லா தெய்வம் நீயம்மா...(2) (அன்)

ஆறுதலைத் தந்திடவே
உன்னையன்றி யாரும் உண்டோ
ஆதரித்து அன்புடனேகாப்பாய் – எம்மை (ஆத)
என்றும் எந்தன் மனக் கோவிலிலே
இன்பமுடன் வீற்றிருப்பாய்
எங்கள் குல தெய்வமும் நீயம்மா(2) (அன்)

சந்ததமும் உந்தன் புகழ் சங்கீதமாய்ப் பாடி நின்றேன்
சகலமும் எனக்கென்றும் நீயம்மா(2)
சரணங்கள் பாடி உந்தன்
சரணகமலம் போற்றி நின்றேன்
சடுதியில் ஓடிவரும் தாயம்மா(2) (அ)
------------------------
22/ வெங்கடேசன் கொலுவிருக்கும்- மெட்டு
பாதமலர் பற்றி நாளும் பரவசம் கொண்டிடுவேன்
வேத மய ஜோதியான என் அன்னை உந்தனின்
(இரண்டு முறை) (பாத)

மனம் மயங்கும் உந்தன் பாடல் தன்னிலே
அதைப் பாடி ஆடி பணிந்திட பேரின்பம் வாழ்விலே
பண்ணிசைத்துப் போற்றும் உள்ளம் தன்னிலே
பரிமளிக்கும் சுகந்த காந்தி நீயம்மா (பா)

சந்ததமும் காத்திடுவாய் தாயம்மா
சர்வமைய ஜோதி ரூபம் நீயம்மா
ஜய ஜய ஜய ஜகன் நாயகி நீயம்மா
ஜெயம் அருள்வாய் எங்களுக்கு நீயம்மா (பா)

அஞ்சல் என்று அபயக் கரம் காட்டுவாய்
அடைக்கலமாய் நம்பியவர் யாவருக்கும்
அருள்மழையைப் பொழிந்து வளம் சேர்த்திடுவாய்
அன்னை நீயே எப்பொழும் காத்திடுவாய் (பா)
-----------------
23. அழகெல்லாம் முருகனே –மெட்டு
ஜெயம் யாவும் நல்கிடுவாள்
ஜெகம் புகழும் தாயவளே
ஜெகஜ்ஜோதி ஆனவளே ஜெகஜ் ஜனனீ என் அம்மா(2)

ஜெய ஜெய எனப் போற்றிடுவோம்
ஜெகன் நாயகி தாயை என்றும்
ஜெங்கார ஸ்ருதி மீட்டி சிங்காரத் துதிப்பாடி
சங்கீத மழையாலே பொங்கும் இசைக் கடலாகி
எங்கெங்கும் நீங்காத தங்கமானத் தாயவளே(2)(ஜெ)

பண்ணான பலப் பாவால் கண்ணான தாயவளை
எண்ணாத நாளில்லையே உண்ணாமல் உறங்காமல்
திண்ணமாய்க் காத்திடுவாள்
வண்ணமாய் ஜொலித்திட்வாள்
எண்ணமதில் குடியிருப்பாள்
என்றென்றும் காத்திட்வாள் (ஜெ)

24. நினைத்தாலே அருள் வழங்கும் என் தாயே
உனை நெஞ்சாறப் போற்றுகின்றேன் உன் சேயே(2)

உயிரில் உயிரக கலந்து நின்றாய் –என்
ஊனின் உறுப்புகளாய் நீ நின்றாய்
ஊக்கம் கொடுத்தென்னைக் காத்திடுவாய்
என் ஊழ்வினை தனை நீயே போக்கிடுவாய்
அம்மா... அம்மா....(4 முறை) (நி)

அழகின் வடிவங்கள் நீயம்மா
அகில உலகெனக்கு நீயம்மா
அடக்கலமுந்தன் மலர்ப் பாதம் அம்மா
அனுதினம் உனைப் புகழ்ந்தே பாடிடுவேன்
அம்மா... அம்மா....(4 முறை) (நி)
---------------------
25. செந்தூர் கந்தையா... –மெட்டு
அம்மா வந்தருள்வாய் – உந்தன்
அன்பைத் தந்தருள்வாய் –என்றும்
அனுதினம் உந்தன் பதம் நாடி.. –நான்
நாளும் துதித்திடுவேன்..(அம்மா)
எனக்கு ஆறுதலைத் தந்திடவே
தாயாய் விளங்கும் தெய்வமே..(2) (அம்மா)

வாழ்த்தி உந்தன் புகழினையே
ஒருமனதாய்ப் போற்றிடுவோம்
வழிகாட்டி நாளும் எங்களையே
------------------------------
26 தணிகை வாழும் முருகா மெட்டு
சரணம் பாடி மகிழ்வேன்
உன்னை நாளும் போற்றி நானே..
என்னைக் காத்துக் காத்து அருள்வாய் (ச)

அன்பு அன்னை உன்னை
அகம் மகிழ நானே
பண்பாடித் துதிப்பேனே தாயே...

அருளோடு எனைக்காக்கும் தெய்வம்...
ஆதாரம் உனையன்றி யாரோ...
தினம் போற்றிப் பரவிடுவேன் நானே...
புகழ் பாடிப் பாடி நாளும் (ச)

தீமைதனைப் போக்கி தூயவழி காட்டும்
கருணாமய ஜோதி நீயே...
தூள் போல துயர் தன்னை மாய்ப்பாய்
துவளா மனம் தன்னை அருள்வாய்...
கண்கண்ட தெய்வமே... உன்னை...
தினம் பாடிப் பாடி மகிழ்வேன்...(சரணம்)
---------------------------

27/ தித்திக்கும் தேனமுது மெட்டு
ஹம்மிங்
தித்திக்கும் தேனமுது.......அம்மா...

பாடல்
தித்திக்கும் தேனமுது உன் திருவாய் சொல் இசையமுது
பக்க்தக்கும் அருளமுது .... உன்...
பரிமளிக்கும் பெயரமுது.....(தித்திக்கும்..)

தமிழ்ப்பாவால் உனைப்பாடி....
தாமரைமலர் .......அடிபோற்றி.....
பண்பான இசையமைத்து....என்
பைங்கொடியே...உனைப் புகழ்வேன்...(தித்திக்கும்)

நான்மறைகள் ...நாள்தோறும்....
நாடி..உனைப் போற்றிடுமே.....
நாயகியே....நலமுடனே.... உன்...
நலம் தன்னை...வாழ்த்திடுமே....
நபி உன்னை சரணடைந்தேன்.....
நாளெல்லாம் காத்திடம்மா......
நலமுடனே...வாழ்ந்திடவே....
நல்லருள் தந்திடம்மா....(தித்திக்கும்...)

பல நூறு....கவியாலே.....
பாமாலை சூட்டிஎன்றும்....
பைந்தமிழ்...பச்சரத்தால்.....
என்....
பைகொடியே......உனைப் பணிவேன்.....(தித்திக்கும்..
28/ வீணை இசையில் உனை நான் அழைத்தேன்
ஏனோ இன்னும் நீ வரக்காணேன் (வீணை)

வானில் மழைமேகம் தவழ்கின்றதே................
தொகை மயில்கூட அசைகின்றதே............
மாலைப் பனித்தூவி மகிழ்கின்றதே...............
மனம் உருகி உருகி நானழைத்தேன்..........(வீணன்)

தாயே உன்புகளைப் போற்றிநிர்க்கும் ........உன்
சேயாம் எனை நீயேக் காத்தருள்வாய்..........

பாவால் உனைப் பாடும் பண்ணதனைத்
தமிழ்ப் பாவால் உனைப் பாடும் பன்னாதனைப்
பூவாய் நீ கேட்டு மகிழ்ந்தருள்வாய் .............
பெண் பூவாய் நீகேட்டு மகிழ்ந்தருள்வாய்........
வீணை இசையில் உனை நான் அழைத்தேன்................

29. காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே – மெட்டு
கருணை மனம் கொண்ட எந்தன் அன்பு அன்னை-உன்னை
காலம் யாவும் போற்றி நிற்பேன் கேட்டருள்வாய்(2)
சேவடியை நாளும் நாளும் தொழுது நின்றேன்..- எந்தன்
சிந்தையிலே நீயிருந்தே காத்தருளம்மா
அம்மா காத்தருளம்மா(கரு)
மாறாத அன்பு மனம் கொண்ட தாயே- உந்தன்
உந்தன் மகளான என்னைக் கண் பாத்தருளம்மா
அம்மா(பா) (க)
தேனான இசைத்தமிழால் உன் புகழை
திவ்யமாகப் போற்றிடுவேன் கேட்டருள்வாய்-அம்மா (கே) (கரு)
------------------------------
31. திரு நபி பேரா... (மெட்டு)
கருணையின் உருவே....
காருண்யத் திருவே......
கருணைக்கு கைகள் ஏந்தி வந்தேன்....
கண்ணீரை நான் ஏந்தி வந்தேன்....

இரங்கிடுமா நெஞ்சம்......
இளகிடுமா,,,,, கொஞ்சம்.. –அம்மா(இ)
அல்லலைப் போக்கும் அன்னையும் நீயே....
அருள்வடிவே எந்தன் அம்மா........
அரவணைப்பாய் என்னை நீயே.....
கருணை தயாபரி கனிவுடன் காப்பாய்...
காலமெல்லாம் துணை வருவாய்(2) (கரு)

உள்ளத்தில் பார்க்கின்றேன் .... என்றும்
உன்னிடல் கேட்கின்றேன் ... அம்மா..(உள்)
அன்புடன் காப்பாய்.... அரவணைத்திடுவாய்...
அருள்வடிவே.... எந்தன் அம்மா...... –என்றும்
அடக்கலம் உன் மலர்ப் பாதம்(கரு)
----------------

32. எல்லாமே நீதான் வல்லோனே அல்லா என்ற பாடல் மெட்டு-
ஹம்மிங்

பார்புகழ் தெய்வமே.................
பாவையே............ என்...........செல்வமே...................
அம்மா...............................
அம்மா................................................

பாடல்

எல்லாமே நீதான்............. வல்லமை செய்யும்.......
எல்லாம் அறியும் .............என் தாய் நீயே.......(எல்லாமே.........)..


ஈரைந்து.....திங்கள் ................அன்புடன் ...............
சுமந்தாய் ........................
ஈடில்லா கருணை மழைமுகில் நீயே.............(இரண்டு முறை)

எங்கணும் நிறைந்தே...........எங்களைக் காப்பாய்............
என் அன்னை உன்னை.........சரணடைந்தேனே...........(எல்லாம்)


வற்றா நீரூற்றாய் .................தாகம் தணிப்பாய்..........
வளம்மிகு நல்வாழ்வு........ நாளும்..............சேர்ப்பாய் (இரண்டு முறை)

வந்தனை உனக்கே ஏற்றருள் தாயே..............
வருவாய் என் அம்மா...............
அரவணைத்திடுவாய்....................(எல்லாமே.................)

அம்மா.................என் அம்மா...............................
அம்மா................என் அம்மா........
--------------------
33. காட்சி தந்து எம்மை ஆட்சி செய்வாய் அம்மா
கருணாகரி.... கருணையுடன் தினமும்(காட்சி)

மாட்சியெல்லாம் வாழ்வில் சேர்ந்திட கனிவுடன்
மங்களம் நல்கிடுவாய்...
மகிமைகள் பல புரிந்தே(காட்சி)
அன்புடன் நீ என்னை அனுதினம் காத்தே.....ஆனந்தப் பேரின்ப நிலயினை நல்கி....
பாரினில் நானுயர பாங்குடன் வழிசெய்தாய்
பதமலர் போற்றி நின்றேன்...
ஏற்றருள் என்றும்....(காட்சி)
------------
34. ஏசு என்னும் நாமம் பேசுகின்ற போது என் உள்ளம் மகிழ்வுகொண்டது என்ற பாடல் மெட்டு
ஹம்மிங்

அன்னை உன்னைப் பாட....................
எந்தன் உள்ளம் நாடி..................
இன்பமுடன் ஓடிவந்தது .......................
அது ஏழிசையாய் ...............பாடுகின்றது......
.
பாடல்
.அன்னை உன்னைப் பாட....................
எந்தன் உள்ளம் நாடி..................
இன்பமுடன் ஓடிவந்தது .......................
அது ஏழிசையாய் ...............பாடுகின்றது..(இரண்டு முறை).

என்................ உள்ளமதைக் கொள்ளைக் கொண்டாய்...................
உன் இல்லமென .................அங்கு நின்றாய்................
அன்னை உன்னை நானே...................
அடிபணிந்து போற்றி ...................
அன்புடனே வாழ்ந்திடுவேன்........................
நான் அனுதினமும் வாழ்ந்திடுவேன் .........

வான்....................வையகமும் யாவும் நீயே................
என்.................. வாழ்வும் வழியும் யாவும் நீயே.............

அங்கும் இங்கும் எங்கும்...................
அன்புடனே ..................நின்று...................
அருளாட்சி செய்திடுவாய்............................
எனக்கு அருள் தனயே.................நல்கிடுவாய்.......................(அன்னை)

36. ஹரிஹர சுதனே..... சரணம்- மெட்டு
அன்னையே வருவாய்........ அருள்வாய்.....
என் மனக் கோவில் உறையும்.... தாய் எனைக் காப்பாய்

சரணம் சரணம் என் அன்னையே.... – எழில்
சாந்தஸ்வரூபியே... சந்ததம் காத்தருள் (ச)
மரணபயம் நீக்கும் தாய் நீயே காப்பாய்
மானிடர்த் துயர்த் தீர்க்கும் தயே... அருள்வாய்
தருணம் இதுவென்னைக் காத்திடு தாயே....
தஞ்சம் உன் மலர்ப் பதமென வந்தேன்(சர)

கொஞ்சும் தமிழில் உன்புகழ் இசைப்பேன்
கொன்றை மலரால் உன்பதம் துதிப்பேன்
அஞ்சும் எந்தனுக்கு ஆறுதல் நீயே....
அழியப் பெரும் பொருள் அளித்திடும் தாயே..(சர)
அன்னையே சரணம்... அருளே சரணம் (3 முறை)
அருளெ........ திருவே.......
வருவாய்....... காப்பாய்......
-------------------
37. காவடி ஆடிவந்தால் கந்தா என் மனம் உருகி -மெட்டு
பாமாலைப் பாடி நின்றால்
அம்மா என் மனம் உருகி
கண்ணீர் வழிந்தோடுதே... –உன்

சேவடித் தொழுதெழுவேன்...
சிந்தை மகிழ என்றும்....
பாமலர் சூட்டி என்றும்
பாடி. ஆடிக் களிப்பேன்..- உன் (பா)


அங்கமெல்லாம் உருகி அனுதினம் உந்தனின்
அடிமலர் போற்றிடவே எண்ணுதம்மா...
ஆவலோடுன்னைப் போற்றி அன்புடன் தினம் ஏற்றி
ஆனந்தம் பெற்றிடுவேன் ஐயமின்றி நானே (உன்)

38. ஆசைக் கொண்டேன் நானே
உன் புகழ் பாடவே
அன்னையே நீ..... அருள்வாய்....

வாசமலரைக் கொண்டு வழிபடும் உன்னை நான்
வலம் வந்து வலம் வந்து நலம்பெறவே தினம்(ஆ)

என்னிலை வந்தாலும் எங்கு நான் இருந்தாலும்
ஏகாந்தமாகவே உன் புகழ் பாடுவேன்
உன் அருளைத் தந்து என் இருள் போக்குவாய்
உன் பத மலர் தன்னை நான் என்றும் பாடவே(ஆ)

--------------------
39. உனைப் பாடும் பணியின்றி வேறில்லை
எனைக்காக்க உனையன்றியாருமில்லை
அம்மா.................. அம்மா....................(உனை)

அமுதத் தமிழில் பல பண்ணெடுத்து -உந்தன்
அருளை நாளும் நானும் போற்றிடுவேன்
குமுத விழியிரண்டால் காத்தருள்வாய் –எங்கள்
குறைகள் தனைப் போக்கி நலம் அருள்வாய்
அம்மா.................. அம்மா....................(உனை)




சீலம் மேவும் பல பெரும் புகழை – என்றும்
ஞாலம் தனில் நீயே பெற்றுயர்ந்தாய்
கோல விழியாலே எமைக்காப்பாய் –உய்யும்
பலமாய் நீயிருந்தே கரை சேர்ப்பாய்
அம்மா.................. அம்மா....................(உனை)
---------------------------

40 சிங்கார வேலைய்யா – மெட்டு
சிங்காரத் தாய் நீயே... செந்தூரப் பூ நீயே...
ஒய்யார எழில் ரூப ஓம்கார ஸ்வரூபியே(சிங்)


கோல எழில் உன்னைக் கோடி மலர் தன்னால்
கோடி அர்ரனையால் துதித்திடுவேன்
சீலம் மேவி என்றும் செம்மை மிகுந்திட்ட
தாயே உந்தனை நாடிடுவேன் (சி)

வழிகாட்டம்மா.... வழிகாட்டு –நாங்கள்
வாழ்வில் நல்லறங்கள் பெற்றுயர்ந்திடவே
குருவாய் வந்தருள்வாய் கருவாய் எனைச் சுமந்த
கனிவான அன்னை உன்னைப் போற்றிடுவேன்.(சி)
-----------------------------
41. துள்ளுமத வேட்கை கனையாலே- திருப்புகழ் மெட்டு
பைந்தமிழ்ப் பாமாலை புனைந்தேனே
பக்தியுடன் உந்தன் பதமலரில்
பல கவிகள் நீயே ஏற்றருள்வாய்
பைங்கொடி நீயென்னைக் காத்தருள்வாய்;

சந்ததமும் உனைநான் சரணடைந்தேன்
சிந்தை தனில் நீயே வீற்றிருப்பாய்
செந்தமிழ்த்தேன் கவி மொழியாலே
செம்மை மிகும் உந்தன் புகழிசைப்பேன்(பை)
-------------------------
42. நாராயணா என்னும் பாராயணம் – மெட்டு

வா வா நிதம் எம்மைக் காத்தருள்வாய்
வரம் யாவும் தந்தருளும் என் தாய் நீயே(2) (வ)

பாதார விந்தங்கள் பணிவோர் தம்மின்
பவவினைகளைப் போக்கிடும் எழில் தீபமே(2)
பல பாவால் உனைப் போற்றி மகிழ்ந்திடுவேன்
பாமாலை தனை சூட்டிப் புகழ்பாடுவேன்
திருவே உன்மலர்ப் பாதம் தனை நாடியே
தீரா வினையாவு போக்கிடுவேன் (2) (வா)

சித்தியளித்திட முக்தி கொடுத்திட
சக்திகள் பெற்றவளே..
தேவர்கள் மூவர்கள் யாவரும் போற்றிடும்
மேன்மைகள் பெற்றவளே
தத்துவ வேதங்கள் மெத்தவே போற்றும் உன்
சத்தியக் கமலங்களை
தாயே உந்தனை நாளும் வேண்டினேன்
கடக்கண் பார்தருள்வாய்(2) (நா)
--------------------------
43. எங்கும் முருகனைப் பார்க்கின்றேன் –மெட்டு

எங்கும்................... அன்னையைப் பார்க்கின்றேன்..
எதிலும்.......... அவள் குரல் கேட்கின்றேன்.............
பார்க்கும் இடமெங்கும் திகழ்கின்றாள்
பாடல் கேட்டு மகிழ்கின்றாள்(எங்கும்)

செந்தமிழில் பாடிநின்றேன்
வந்தனைகள் கூறிடவே
உள்ளமதில் எண்ணி எண்ணி மகிழ்ந்தேன்
செந்தூரத் திலகமிட்டு சிங்கார எழில் மேவும்
ஒய்யாரத் தாயவளைப் போற்றி

கோடி நலம் பெற்றிடவே கோலவிழிப் பேரழகை
கோர்வைய்ப் போற்றி நான் மகிழ்ந்தே
தேடி நலம் பெற்றிடுவேன்
தெய்வமாய்த் திகழ்பவளின்
திருவடி மலரடிப் பணிதே (எங்கும்)
-------------------------
44. பரம பாவன கிருஷ்ணா.. – மெட்டு

பதமலர் தனை நிதம் போற்றி...
பணிவுடன் வாழ்த்தினேன் வாராய்...
கருணாமய ஜோதி காப்பாய்
கண்கண்ட தெய்வமே என் அம்மா(ப)

சகல நலன்களை அருளும்
சாந்த தயாபரி வருவாய்..
சர்வமும் எனக்கென்றும் நீயே
சர்வ வியாபினியும் நீயே (பத)
ஸ்ரீ ஜெய ஜெனனீ நீயே....- அம்மா
சிந்தையில் இருந்தெம்மைக் காப்பாய்..
செந்தமிழ்ப் பாவால் பாடி உன்பதமலர்
ஜெய ஜெய என தினம் போற்றிடுவேன். (ப)

--------------------------------
பக்தி மலர் தொடரும்

எழுதியவர் : ஸ்ரீ விஜயலக்‌ஷ்மி (1-Mar-19, 6:01 pm)
பார்வை : 462

மேலே