வாழ்க்கை

அது ஒரு காலம்
கணவனையே தெய்வம்
என்றும் அவன் கட்டிய தாலி
அவனையே நம்பி வாழ்வதற்கு
அவன் போட்ட வேலி என்றெல்லாம்
எண்ணி வாழ்ந்த காலம்
சுமங்கலிப் பெண்ணிற்கு தாலியே
அடையாளம் காட்டும் காலம் அது
இன்றும் தாலி உண்டு பெண்ணிற்கு
aanaal அது அணிவது அணியாமலிருப்பதும்
அவள் இஷ்டம் என்றாகிவிட்டது
கேட்டால் தாலி எதற்கு என்று திருப்பி
பணம்போல் வந்து சீரும் ஓர் கேள்வி
பூவும் பொட்டுமாய் இருத்தல்
சுமங்கலிப் பெண்ணிற்கு அடையாளம்
ஒவ்வொரு திருமணம் ஆன பெண்ணும்
அதையே போற்றி வந்த காலம் அது
இன்றும் பூவை வெகுவாக விரும்பும் பெண்
பூவை 'பிளவர் ஷோவில் ' பார்க்க விரும்புகிறாள்
தன் தலையில் கூந்தலை அழகுபடுத்த அல்ல
நேற்றுயில் திலகம் வைத்தால் இழிவு
என்றே நினைக்கும் பெண்கள் ……
இப்படி காலச்சூழலில் நாம்
நம் கலாச்சாரமும் மிதிபட்டு போகிறது
கடவுள் இருக்கிறான் என்றால்
யார் அது கடவுள் எங்கே இருக்கிறான்
காட்டுப்பார்ப்போம் என்று கேட்கிறார்
நாம் வைத்த நம்பிக்கையை நாமே
தகர்த்தால் நம்பிக்கை என்ற சொல் எதற்கு

சுழலும் கால சக்கரத்தில் மனிதன்
இழந்த நம்பிளையை மீண்டும் உணர்வான்
நல்லவை எல்லாம் ஏற்றுக்கொள்வான்
நலமோடு வாழ்வான்
இது என் நம்பிக்கை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (4-Mar-19, 3:20 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 317

மேலே