ஏமாற்றம் மாறவில்லை

எங்கும் உடைந்த வீடு /
ஆங்காங்கே சிதைந்த பாதை /
பார்க்கும் இடமெங்கும் முள்வேலி /
நடக்கும் வழியெங்கும் அடிக்கிய
மண் மூட்டை/

அதன் அருகே முறைத்த வாறு /
துப்பாக்கியை நீட்டிய படி ஒருத்தன் /
எத்திசை நோக்கினாலும் பாதுகாப்பு/
பகலிலும் பட படப் போடுதான்
வாழ்க்கைப் பயணம் /

பூமிக்கு இடியோடு மழை வர மறுத்தது/
செல் வெடியோடு குண்டு மழை /
பூமியை தினம் துழைத்தது /
தென்னங் குலைகளோடு தென்னை
மரமும் சாய்ந்தது/

மரத்தோடு சேர்த்து தோட்டக் காவலனையும் கொன்றது /
நிலத்திலே வெள்ளம் பெருகி ஓட அனுமதியில்லை /
இரத்தோட்டம் மண்ணை அபகரித்தது/

இன்று புதிய தோற்றம் கண்டது /
மாடி வீடும் அரண்மனைபோல் இல்லமும் /
தெருவெல்லாம் புதுமையானது
ஏற்றங்கள் பல தோற்றங்களானது /

ஆனாலும் ஏமாற்றம் மாறவில்லை /
ஏழையின் வறுமைத் தோட்டம் மலரவில்லை/
தமிழ் உரிமை பிறக்கவில்லை /
சமத்துவமான வாழ்வையும் காணவில்லை /

/நாடு செழிப்புற்றவை ஒன்றே
தான் உண்மை /

(புகைப்படம் மட்டக்களப்பு நுழை வாசல் )

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (4-Mar-19, 6:45 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 114

மேலே