தாவின்றி எப்பொருளுங் கண்டுணர்ந்து – அறநெறிச்சாரம் 1

நேரிசை வெண்பா

தாவின்றி எப்பொருளுங் கண்டுணர்ந்து தாமரைப்
பூவின்மேற் சென்றான் புகழடியை - நாவின்
துதித்தீண் டறநெறிச் சாரத்தைத் தோன்ற
விரிப்பன் சுருக்காய் விரைந்து. 1 அறநெறிச்சாரம்

பொருளுரை:

குற்றம் இல்லாமல் எல்லாப் பொருள்களின் இயல்பையும் ஆராய்ந்து அறிந்து, தாமரை மலரின் மேல் சென்ற அருகனது பெயர்பெற்ற திருவடிகளை நாவினால் புகழ்ந்து இங்கே அறநெறிச் சாரமாகிய இந்நூலை விளங்க மிக விரைவாக விரித்துக் கூறுவேன்.

குறிப்பு:

இது தற்சிறப்புப்பாயிரம்; ''தெய்வ வணக்கமும் செயப்படுபொருளும் உரைப்பது'' தற்சிறப்பாகலின். தெய்வம்-வழிபடு கடவுள்; ஏற்புடைக் கடவுளும் ஆம், அறத்திற்கு முதல்வனாகலின்.

குற்றம்-ஐயம் திரிபுகள். காணல்-ஈண்டு ஆராய்தல்;

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Mar-19, 5:45 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 81

சிறந்த கட்டுரைகள்

மேலே