கேள்வியின் நாயகனே – மெட்டுப் பாடல் அன்புத் தந்தைக்குக் காணிக்கை

கேள்வியின் நாயகனே – மெட்டுப் பாடல் (அன்புத் தந்தைக்குக் காணிக்கை)



பாசம் மிகும் தெய்வமே...... –உந்தன்
பதமலர் போற்றி நின்றேன்......
பலநூறு கவிபாடி... பாமலை தினம் சாற்றிப்
புகழாரம் சூட்டிடுவேன்... உனக்கே...
புகழாரம் சூட்டிடுவேன் (பாசம்)

தயையே உந்தன் புகழ் பாடிடவே –நாளும்
தஞ்சம் அடைந்தேனே...... உந்தனிடம் – என்
தந்தையே எனை நீயே... ஆட்கொள்ள
தருணம் இதுவே நீ வந்தருள்வாய்..... (3 முறை) (பாசம்)

பலனை எதிர்ப்பாரா பெருந்தகையே.... – நீ
பண்பில் உயர்ந்து நின்ற நவ நிதியே.....
சரணங்கள் பல உனக்கே ஏற்றருள்வாய் – அப்பா
சடுதியும் மறாவாது காத்தருள்வாய்....(3 முறை) (பாசம்)

அன்புடன் ஸ்ரீ. விஜயலஷ்மி,
கோயம்புத்தூர் 22

எழுதியவர் : ஸ்ரீ. விஜயலஷ்மி, (7-Mar-19, 4:08 pm)
பார்வை : 47

மேலே