நான்குபோது உண்பான் உடல்விட்டுப் போகுமே யென்று புகல் - நீதி வெண்பா 9

நேரிசை வெண்பா

ஒருபோது யோகியே ஒண்டளிர்க்கை மாதே
இருபோது போகியே யென்ப - திரிபோது
ரோகியே நான்குபோது உண்பான் உடல்விட்டுப்
போகுமே யென்று புகல். 9 நீதி வெண்பா

பொருளுரை:

”ஓள்ளிய தளிர் போலுங் கைகளையுடைய பெண்ணே! ஒருநாள் ஒருபொழுது உண்பவன் யோகியென்றும், இருபொழுது உண்பவன் போகியென்றும், ஞானியர் சொல்வர்; மூன்று வேளை உண்பவன் வியாதியாளனென்றும், நான்கு வேளை உண்பவன் உயிர் உடலினின்று விரைவில் விட்டுப் போகுமென்று சொல்” எனப்படுகிறது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Mar-19, 5:40 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 90

சிறந்த கட்டுரைகள்

மேலே