சிவன் போற்றி

சிவன் போற்றி!
—————————
1. மூவுலகிற்கும் தலைவா போற்றி !
2. முக்கண் அழகா. போற்றி!

3 அபிராமியின் அன்பனே போற்றி!
4. அழகனின் அப்பனே போற்றி!

5. ஆனைமுகன் ஈன்றாய் போற்றி!
6. ஆதிசக்தி அணைத்தாய் போற்றி!

7. தென்னாடுடை சிவனே போற்றி!
8. தெவிட்டாதமிழ்த் தலைவா போற்றி!

9. சோதிலிங்கமாய் அமைந்தாய் போற்றி!
10. சொக்கலிங்கமே போற்றி! போற்றி!

11. பிட்டுக்குமண் சுமந்தாய் போற்றி!
12. பித்தாய்பிறை. சூடினாய். போற்றி!

13. மீனாட்சி மணாளா. போற்றி!
14. மாதொரு. பாகா போற்றி!


15. அகப்பொருள் உரைத்தாய். போற்றி!
16. அன்பேசிவம் ஆனாய். போற்றி!

17. ஆலகாலவிஷம் உண்டாய். போற்றி!
18. ஆகாயகங்கை அணிந்தாய். போற்றி!

19. பாதிமதியைச் சூடினாய். போற்றி!
20. பாம்பையணிந்த பரமா போற்றி!

21. அன்பெனும்பிடியில் அகப்படுவாய் போற்றி!
22. ஆடலரசனே நடராஜனே. போற்றி!

23. அகத்தியமுனிக்கு. அருளினாய். போற்றி!
24. அரக்கனின்இசைக்கு மயங்கினாய் போற்றி!

25. உடுக்கை ஒலிப்பவனே போற்றி!
26. உம்பர் தலைவா போற்றி!

27. புலித்தோல் அணிந்தாய். போற்றி !
28. பம்பை. அடிப்பாய். போற்றி!

29. ஜம்புலிங்கமானாய். போற்றி!
30. ஜகதீசனேப் போற்றி போற்றி!

31. தாயுமானவரே. போற்றி போற்றி!
32. தகப்பன்சாமியை ஈன்றாய் போற்றி!

33. சுடலைநீரு பூசினாய் போற்றி !
34. சுடருடை கையினாய் போற்றி!

35. ரத்னகிரீஸ்வராப் போற்றி!
36. ராமன்தொழும் ஈஸ்வரா போற்றி!

37. தசமுகனுக்கு அருளினாய் போற்றி!
38. தமிழ்ச் சங்கத்தலைவா போற்றி!

39. செந்தழல் நிறமுடையாய் போற்றி!
40. செந்தூரின் பஞ்சலிங்கமே போற்றி!

41. பவளமேனி ஒளிநீரணிந்தவா போற்றி!
42. பனிமலை மேவினாய். போற்றி!

43. வெள்ளைவிடைமேலமர்ந்தாய் போற்றி!
44. வேள்வி விரும்புவாய் போற்றி!

45. சோதி லிங்கமே போற்றி!
46. சேக்கிழாருக்கருளினாய் போற்றி!

47. செந்தூரநிறத்தினாய் போற்றி!
48. செந்தழலேந்தினாய். போற்றி!

49. பிள்ளைக்கறிக் கேட்டாய் போற்றி!
50. பிறப்பறுக்க. வல்லாய். போற்றி!

51. அபிஷேகம் விரும்புவாய். போற்றி!
52. அன்பர்க்கருள்வாய். போற்றி !

53. மல்லிகார்ஜுனரே. போற்றி!
54. மகேசா. போற்றி. போற்றி!

55. நிலையாமை உரைத்தாய் போற்றி!
56. நீல கண்டாய். போற்றி!

57. சுடலைக் காப்பாய். போற்றி !
58. சுந்தரருக்கு அருளினாய். போற்றி!


59. உமைக் கேள்வா போற்றி!
60. ஊழி கூத்தாடினாய் போற்றி!

61. நக்கீரனுக்கருளினாய் போற்றி!
62. நாதமாய் ஒளிப்பாய்ப் போற்றி!

63. வேண்டுதல்வேண்டாமை இல்லோனே போற்றி !
64. வேள்வி விரும்புவாய் போற்றி!


65. வானோர்க்கும் ஏனோர்க்கும் தலைவா போற்றி!
66. வானோக்கும் வளர்மதி சூடினாய்ப்போற்றி!

67. அன்பிற்கு அடிமை ஆவாய்ப் போற்றி !
68. ஆயிரம்கரத்தாளை அணைத்தாய்ப் போற்றி!

69. சுந்தரருடன் வழக்குரைத்தாய்ப் போற்றி !
70. சுத்தபிரம்ம லிங்கமே போற்றி!

7 1. நிர்மலா போற்றி போற்றி!
72. நிமலா போற்றி. போற்றி !

73. அருணாசலனே போற்றி!
74. அண்ணாமலையே போற்றி!

75. காக்கும் காவலனேப் போற்றி!
76. கண்ணுதக் கடவுளேப் போற்றி!

77. அஞ்ஞானம் அழிப்பாய் போற்றி!
78. மெய்ஞானம் அளிப்பாய்ப் போற்றி!

79. அளப்பறி அழகாப் போற்றி!
80. அறம் காப்பாற்றுவாய் போற்றி!

81. தில்லையுள் கூத்தனே போற்றி!
82. தேவருக்குத்தேவனேப் போற்றி!

83. ஆதியும் அந்தமும் இல்லாய்ப் போற்றி !
84. அத்தனே ஐயனேப் போற்றி !

85. அறிவதற்கு. அரிதே போற்றி !
86. அழிக்கவும். ஆக்கவும் வல்லாய். போற்றி !

87. கொன்றை மலர் சடைமேல் சூடினாய்ப் போற்றி!
88. . கொடுமுடி நாதாப்போற்றி!

89. திரிநயனம் கொண்டவாப் போற்றி!
90. திகம்பராப் போற்றி !

91. நமச்சிவாயாப் போற்றி !
92. நாதநாயகனேப் போற்றி !

93. அருமை நாயகாப் போற்றி!
94. அம்பலத்தில் ஆடுவாய்ப் போற்றி !

95. மந்தாகினி நீர் அணிந்தவாப் போற்றி!
96. மகேசாப் போற்றி. போற்றி!

97. யட்சவடிவாய்ப் போற்றி!!
98. யாண்டும் அழியாய்ப் போற்றி !

99. பஞ்சாட்சரத்தில் உறைவாய்ப் போற்றி!
100. பார்வதி மணாளாப் போற்றி!

101. சட்டைநாதாப் போற்றி !
102. சம்போபோற்றி சிவசிவாப்போற்றி !

103. வழக்கருக்கும் வழக்கருத்தீஸ்வர்ரேப் போற்றி!
104. வைத்யலிங்கேஸ்வராப் போற்றி !

106. ஏகாந்தாப் போற்றி!
107. ஏகாம்பரேஸ்வராப் போற்றி

108. ஆயுள் அருளும் அமிர்தகடேஸ்வராப் போற்றி!

ஓம் நமச்சிவாயம் .

சாந்தா வெங்கட்

எழுதியவர் : சாந்தா வெங்கட் (9-Mar-19, 3:21 pm)
சேர்த்தது : சாந்தா
பார்வை : 640

மேலே