அன்புள்ள நண்பனுக்கு -

நானென்று சொல்ல
நாவில் இல்லை
தைரியம்
ஏனென்று கேட்டால்
என்னுள் வாழ்வது
நீயடா
நீயென்று சொல்ல
என்னுள் இல்லை
பிரிவினை...

நாமென்றேன்
செத்து மடிந்தது
சாதி, மதம்,
நட்பென்றேன்
நெஞ்சில் வளர்ந்தது
போதி மரம்...
நண்பனென்றேன்
ஓடி மறைந்தது
தனிமை மனம்...

நண்பா,
பகத்தறிவு கொண்டது
நீ, நா,னென பகுபட அல்ல
பாதி உயிர் உனது
பாதி உயிர் எனது
சேர்த்து செய்த மனதில்
நட்பே சிறந்து விளங்கும்...

பள்ளியில் சேர்ந்தோம்
சொல்லை போயினும்
சொர்க்கம் போயினும்
உள்ள முயிர் மறவாது
ஒருபோதும்,
நம் நட்பில்
குறையேதும் சேராது

பாதைகள் பலவாயினும்
பயணம் தினம் மேற்கொண்டும்
தூரம், வெகுதூரமானாலும்
நாளும் நண்பனடா
நீ எனக்கு...
எந்நாளும் நன்றியுறைப்பேன்
நான் உனக்கு...

-கல்லறை செல்வன்.

எழுதியவர் : கல்லறை செல்வன் (9-Mar-19, 5:47 pm)
பார்வை : 1136
மேலே