நிஜத்தில் என்னை கொன்றுவிடடி கண்ணே 555

என்னுயிரே...


உன்னிடம் நான்

காதலை சொல்ல...


பல நாட்கள் என் வீட்டு கண்ணாடி

முன் ஒத்திகை பார்த்தேன்...


உள்ளத்தில் இருந்து சொன்னேன்

உன்னிடம் என் காதலை...


அன்று ஏற்று கொண்டவள்

இன்று காலம் கடந்து...


ஒற்றை வார்த்தையில்

சொல்லி விட்டாய்...


என்னை
மறந்துவிடு என்று...


உன்னை

சேரவும் முடியாமல்...


உன்னை

மறக்கவும் முடியாமல்...


ஆற்று சுழலில்
சிக்கியவனை
போல தவிக்கிறேன்...


ஒவ்வொரு நிமிடமும்

உன்னை மறக்க முடியாமல்...


வார்த்தையால்

என்னை கொன்றவளே...


நிஜத்தில்

கொன்றுவிடடி என்னை.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (9-Mar-19, 7:54 pm)
பார்வை : 674

மேலே