ஜாதி

(இது ஒரு உண்மை சம்பவம் , சிந்திக்க ,சிரிக்க )

என் மனைவிக்கும் வீட்டு வேலைக்காரிக்கு
இடையே இன்று நடந்த ஒரு சம்பாஷணை :

என்மனைவி: ஏண்டி கல்யாணி, உன் பையனுக்கு
இன்னும் கல்யாணம் ஆகலனு கோவில்
கோவிலைப் பொய் வேண்டிக்கொள்கிறாய்
நம்ம எதிர் வீட்டு முனியம்மா பொண்ணு
பளிச்சுனு இருக்கு பார்க்க , படிச்சிருக்கு
பதவுசா அப்பப்ப அம்மாவுக்கு வந்து
வேலைல உதவி செய்யுது…..உன் வீட்டு
பக்கம்தான் வாசிக்கறாளாம்….. என் அவ
பெண்ணை உன் மகனுக்கு ஒத்துப்போனா கட்டி
koden'...………

கல்யாணி (எங்க வீட்டு வேலைக்காரி) அம்மா நீ சொல்றது
அத்தனையும் சரிம்மா …..பொண்ணு நல்ல இருக்கு
படிச்சிருக்கு வேலைக்கு போவுது …...ஆனா
ஆனா...…

என் மனைவி : என்னடி இழுக்கற…. என்ன ஆனா ……….

கல்யாணி : அம்மா அதுவந்து நாங்க எம்.பீ.ஸீ மா அவங்க
எங்களுக்கு கீழங்க ……. எஸ்,ஸீ nga….அதனால
ஒத்துப்போகாதுமா ..

( இந்த பேச்சை ஒட்டு கேட்ட நான் அதிர்ந்தேன் …… ஜாதிகள் இல்லையடி
பாப்பா என்றான் ஒரு கவிஞன் …..இன்னொருவன் ஜாதி இரண்டொழிய
வேறில்லை என்றான்……… நடைமுறையில் ஜாதியின் ஆணிவேர்
எங்கிருக்கிறதென்று யாரறிவார் ?)

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (11-Mar-19, 4:56 pm)
Tanglish : jathi
பார்வை : 92
மேலே