அவள் அழகு

கோபத்தில் பெண்ணே உந்தன்
வதனம் குங்குமப்பூப்போல சிவந்திடும்
அதில் உன் அதரத்தின் கீழ்க் காணும்
சிறுத்த கருப்பு மச்சம் பூவிலிருந்து
தேனை உறிஞ்சும் கருவண்டுபோல்
காட்சி தந்திடும் அதனால் உன்னை நான்
பல நாள் சீண்டி வேடிக்கைப் பார்ப்பதுண்டு
இதை நீ அறியாயோ நான் அறியேன்

சுறுசுறுப்பாய் பட்டாம்பூச்சிபோல நீ
சுற்றி வருகையிலே உன் இடை எங்கே
என்று பார்க்கையிலே கோடி மின்னல்போல்
இடையில் நீ கட்டிய ஒட்டியாணம் மின்மினுக்க
இல்லாத இடையை நான் கண்டுகொண்டேனடி
பெண்ணே , ஆடி வரும் சித்திரப் பாவையாய்
நீ வந்திட , உன்னுடன் ஓடிவந்ததோ ஓர் சிற்றருவி
போல் மெல்லிய இன்ப ஓசைத் தந்ததடி
கால்களில் நீ கட்டிய வெள்ளி கொலுசு

இல்லை மறைவாய் காய்மறைவாய் நீ
காத்துவந்த உந்தன் முன்னழகு முந்தானைக்
காற்றில் ஆட அம்பலமானதடி விருந்தாய்
காத்திருந்த என் கண்களுக்கு

பெண்ணே உந்தன் பேரழகின் அங்கம்
ஒவ்வொன்றும் சாமுத்திரிகா லட்சணத்தில்
காணும் குறிப்பு நீயோ அழகின் இருப்பு
இன்னும் எழுதலாம் என்று முனைந்தபோது
என் எழுதுகோலில் மாசியும் தீர்ந்ததடி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (12-Mar-19, 1:56 pm)
Tanglish : aval alagu
பார்வை : 664

மேலே