பிணியால் வருந்தும் பிறஉறுப்பைக் கண்டு கலுழுமே கண் – நன்னெறி 20

நேரிசை வெண்பா

பெரியவர்தம் நோய்போல் பிறர்நோய்கண் டுள்ளம்
எரியின் இழுதாவர் என்க – தெரிஇழாய்!
மண்டு பிணியால் வருந்தும் பிறஉறுப்பைக்
கண்டு கலுழுமே கண். 20 - நன்னெறி

பொருள்:

ஆராய்ந்த ஆபரணத்தையுடையவளே!

கண்கள், பாதிக்கப்பட்ட நோயினால் வருந்துகின்ற மற்றைய உறுப்புக்களைப் பார்த்து அழும்.

அது போல, அறிவொழுக்கங்களில் பெரியவர் பிறருக்கு வந்த நோயைக் கண்டு தமக்கு வந்த நோய்போல நினைத்து மனம் நெருப்பிலே பட்ட நெய் போல் உருகுவார் என்று அறியக்கடவாய்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Mar-19, 8:39 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 67

சிறந்த கட்டுரைகள்

மேலே