பாவம் அந்த பசு

பாவம் அந்த பசு
பார்ப்பதற்கு லட்சணமாய்
இருந்த வெள்ளைப் பசு
யார் அதை அங்கு
meyavittaro தெரியவில்லை
அது மெட்டு நிலம்
தெரு ஓரம் புல் பூண்டு
அங்கு ஒன்றும் காணவில்லை
பாவம் பசு அதற்கு என்ன பசியோ
தெருக் குப்பைத்தொட்டியில்
தலையை விட்டு மெல்ல பின்
தலையை வெளியே நீட்ட
அதன் வாயில் ஒரு பச்சை
பிளாஸ்டிக் பய் அதனுள்ளே
என்ன மிச்சம் மீதி இருந்ததோ தெரியாது
மெல்ல மெல்ல பசு அதை மென்று கொண்டிருக்க
அதை அருகில் பார்த்திருந்த என் மனம்
நொந்துபோனது வேதனையில்

பசுவை தெய்வமாய்ப் போற்றுகின்றோம் நாம்
காமதேனு என்று போற்றி தொழுவதும் நாமே
பசுவின் உடலில் வேதம் கலந்திருக்கு என்றும் கூறுவர்
அதைப்பேணி வளர்க்க தயங்கிடுவதும் ஏனோ

இலக்கணம் சொல்லுது மனிதர் தேவரும்
திணையில் உயர்ந்தவர்….
பசு தெய்வம் என்றால் அதை நாம்
உயர் துணையாய் நினைத்திட வேண்டாமா
பசுவின் சாணமும் கோமியமும் சேர்ந்த
கலவை தமிழ் வைத்தியத்தில் ஒரு அரும்பெரும்
மருந்து அது தீராத நோயை தீர்த்துவைக்கும்
இத்துணை உயர்வுடைய பசுவை
இப்படி உணவு தேடி அலைய வைக்கலாமா
என் கையில் சில வாழைப்பழங்கள் இருந்தன
அந்த வேளையில் , அதை நான் பசுவின்
வாய்ப்பு பக்கம் எடுத்துச்செல்ல, பசுவும்
அந்த பிளாஸ்டிக் பையை கீழே விட்டது
நான் அதை எடுத்து மண்ணில் புதைத்தேன்
உருவாக்க முடியா பிளாஸ்டிக் இது
இனி நமக்கெதற்கு ….. அதைத் தின்றாலோ
பசுவிற்கு ஆபத்து ...இதை அறிந்திடவேண்டும்
பசுவை ரட்சிக்கும் ஒவ்வொருவரும்
அதைப் போற்றி காப்பதும் நமது கடமை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (13-Mar-19, 11:36 am)
Tanglish : paavam antha pasu
பார்வை : 98

மேலே