முத்துடன் முல்லையுடன் ஓர் நேர்காணல்

அவள் புன்னகையின் புகழ் எழுத
உவமையை யோசித்திருந்தேன்
முத்தும் முல்லையும்
நேர்காணலுக்கு வந்தன ...
இருவரும் செலெக்டட் என்றேன்
முத்திற்கும் முல்லைக்கும் ஆச்சர்யம் !
முல்லையை சரமாக்கி அவள் கூந்தலில் சூட்டினேன்
முத்தை மாலையாக்கி அவள் கழுத்தில் அணிவித்தேன்
அவள் செவ்விதழ்கள் புன்னகையில் மெல்ல விரிந்தன
முத்தும் முல்லையும் வியந்து நின்றன !

எழுதியவர் : கவின் சாரலன் (14-Mar-19, 7:20 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 32
மேலே