மயக்கமும் மௌனமும்

அத்தி மரத்தின்
கிளையிலிருந்து
உடைந்த தேன்கூடு
தேன் சிந்துகின்றன
உடைந்த மூங்கிலுக்குள்
காற்று மோதி சுவரங்கள்
ஏழும் உதிர்கின்றன
நீயும் நானும்
உடைந்த மனதோடு
மரத்தின்கீழ்
உட்கார்ந்திருக்கிறோம்
தேனும் இசையும்
நமக்காகவே
சிந்தி சிதறுகின்றன....

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (14-Mar-19, 10:05 pm)
பார்வை : 267

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே