உயிர் ஓவியம்

பெண்ணே உன்னைப் பார்த்து
பார்த்து மனதில் பதித்துவிட்டேன்
ஓவியன் நான் என் மனதிலிருந்து
எடுத்து உன்னை ஓர் உயிர் ஓவியமாய்
தீட்டிவிட்டேன் இதோ என்முன் நீ
உன்னைப்பார்த்தநானோ உன்னோடு
பேசவில்லை நீ என்னைப் பார்த்தாயா
என்றுகூட தெரியாது ஆனால் என்னுள்
உன் மீது காதல் தீயாய் வந்து என்னை
நித்தம் நித்தம் தீண்டுதடி , இன்று என்னை
நீ பார்ப்பாய் , நான் கேளாமல் என் மீது
உன் பார்வையும் பட்டு நான் உன் மீது
நீயறியாமல் கொண்ட காதலுக்கு
ஒப்புதல் தந்துவிடும் என்று நம்புகின்றேன்
அதுவரை உன்மீது நான் கொண்ட காதலுக்கு
என் உள்ளம்தான் சாட்சி அதற்கும் சாட்சி
இதோ நான் வரைந்த உன் ஓவியம்
அந்த உயிர் ஓவியம் என்முன்னே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (14-Mar-19, 10:31 pm)
Tanglish : uyir oviyam
பார்வை : 205
மேலே