காதல்

நேற்றே கிடைக்கமென
இருந்தேன்
இன்றாவது கிடைக்குமென
நினைத்தேன்
நாளையாவது கிடைக்குமென
பார்க்கிறேன்
மறந்து போகிறாயா
மறுத்துப் போகிறாயா

விழிகளில் தேங்கும்
நீர் கன்னத்தில்
கோடிடும் முன்
தந்துவிடுவாயா

தராமல் போகும் போதெல்லாம்
தொன்டைக்குழி
அடைப்புக்கு மருந்தென்ன

தர மறுத்துப் போகும்
முத்தத்திற்கு
எத்தனை காத்திருப்பு

இத்தனையும் சரி செய்ய
ஒரு மருத்துவ முத்தமாவது
கொடுத்துவிடு

அகிலா

எழுதியவர் : அகிலா (15-Mar-19, 9:43 am)
சேர்த்தது : அகிலா
Tanglish : kaadhal
பார்வை : 293

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே