காதல்

சித்திரா பௌர்ணமி இரவில்
நிர்மலமான நதியின் நீரில்
நிலாவின் பிம்பம் ஆடாது
அசையாது இருக்கக் கண்டேன்
அருகிலே என்னவள் வந்து சேர
நிஜமே என்னருகில் இருக்க இனி
எனக்கெதற்கு இந்த பிம்பம் பார்வைக்கு
என்று கூறி அவளை அள்ளி அணைத்து
முத்தம் தர நிலா அவள் சிரிக்க
பொறாமையால் பிம்ப நிலா காணாமல்
போனது நதி நீரின் மாற்றத்தில்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (15-Mar-19, 11:59 am)
Tanglish : kaadhal
பார்வை : 143
மேலே