அவள்

நிறத்தில் நல்ல கருப்பு அவள்
அள்ளி அடக்கி பின்னிய
கார்முகில் கூந்தலாள் அவள்
கரும்பாறையில் சிற்பி வடித்த
பேரெழில் சிற்பம்போல் வடிவழகாய்
காட்சி தந்தாள் பரந்த விரி
மலர்விழியால் பார்வைத்தந்தாள்
அதில் அம்மன் சிலைபோல் கண்டேன்
நான் அவளை பேசிப் பார்த்தேன்
அவளொரு தனிப்பிறவி என்று தெளிந்தேன்
உள்ளத்தில் பாற்கடல் அவள் என்று
நான் அறிந்துகொண்டேன் இப்படி
கருப்பும் வெண்மையும் கலந்த
தனி யழகு அவள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (15-Mar-19, 12:21 pm)
Tanglish : aval
பார்வை : 256
மேலே