இயற்கை

உடலைக்குத்தும் கொடும் குளிர்
பருவத்தில் எரியும் மிதமான தீ
குளிருக்கு இதம் தரும் உடலுக்கு
குளிர்க்காய , அறுசுவை உணவு
செய்ய தீ வேண்டும் அடுப்பிற்கு
நினைத்த காரியம் கைக்கூட
தொல்லைதரும் கோள்களின் தாக்கம்
குறைய நடத்தும் வேள்விக்கு தீ
இப்படி நன்மைதரும் தீதான் தீய
சக்தியாய் மாறிடுது காட்டுத்தீயாய்
கொழுந்துவிட்டு எரியும்போது
இது தீ , theedhum theeye nanmaiyum theeye

காதலரை வாழவைக்கும் இன்பக்காற்றாய்
காதலிக்கு தூதுவனாய் வரும் காற்று
தென்றல் காற்று அதன் வீசும் இன்பத்தில்
சிட்டுக்குருவியும் தென்னங்கீத்தில் ஊஞ்சலாடும்
என்றொர்க் கவிதையும் நினைவுக்கு வந்தது
இத்தனை மென்மையான காற்று ருத்திர தாண்டவம்
ஆடும் புயலாய் மக்களுக்கு மாபெரும் துயர் தந்து
இது காற்று

நீரில்லை நிலம் இருந்தென்ன பயன்
வெறும் பாழ்நிலமாய், நீரில்லாவிடில்
உலகில் ஜீவ ராசிகள் இல்லை கடலில்
நீர்வற்ற வான்மழைப் பெய்யாது மழை இன்றி
உலகிற்கு உய்வில்லை; மாமழை வந்து
நதியில் கொட்ட nadhiyum பேச தொடங்கினாளோ
நதியில் நீரின்றி நிலத்திற்கேது பாய்ச்சல்
பாய்ச்சல் இல்லாத நிலம் பாலை
பாய்ந்துவரும் நதி நீர் வெள்ளமானால்
நாசம் நாசம் எங்கும் நாசம்
குடிநீர் இல்லாது போனால் விலங்குகளும்
மனிதரும் thaagathaal மாய்ந்து வீழ்வரே
இது நீர்

விண்ணோர் பேசும் மொழியைக்கூட
நமக்கு ஏற்றிவந்த தந்திடும்ம் வான்
ஜீவனுக்கு பிராண வாயுவும் தருவதும் வானே
மாசிலா ஆகாயம் இருந்தது அன்று
மாசு வெகுவாய்க்கூடிய வானம் இன்று
வானில் மாசு தந்திடும் பெருந்துயர்
இது வான்

கலகரைந்து மண்ணானது மாந்தர்க்கு
விளை நிலமாய் மற்றும் வாழ்ந்திட மனைகள்
கட்டும் நிலமாய், நீரின்றி நிலம் பாலை
நிலமின்றி நீர் போவதும் எங்கே
இது நிலம்

நிலம் நீர் காற்று தீ வானம் பஞ்சபூதங்கள்
இவற்றில் ஒன்றிலாது போயினும் ஓய்ந்துவிடும்உலகு

என்னே படைப்பில் விந்தைத்தரும் இயற்கை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (15-Mar-19, 2:10 pm)
Tanglish : iyarkai
பார்வை : 1059

மேலே