இயற்கை
தொட்டணைக்கும் மெல்ல வீசும்
குளிர்த் தென்றலாய் , மோதி உதைத்து
விண்ணளவு தூக்கியும் எறிந்துவிடும் புயலாய்
கண்கொண்டு பார்க்கமுடியாக் காற்று
காற்றிற்கும் ஜீவனுண்டு அது அஃறிணையா
வெறும் கல்லிரண்டு ஜடமாய்க் கைகளில்
இருக்க, இரண்டையும் உராச தீப்பொறியாய்
தீ தன்னைக் காட்டிக்கொள்ளும் வெளி வந்து
கல்லிற்குள் ஜீவனுண்டு அதிலிருந்து வெளி
வரும் நெருப்பிலும் உண்டு ஜீவன்
காணாத காற்றிலும் இருப்பான் கல்லிலும்
இருப்பான் இறைவன் செடிகொடிகள் மரம்
அத்தனையிலும் தூசியிலும் துரும்பிலும்
உறைபவன் அவனே
இன்னும் வரும்