இதயமில்லையா இவர்களுக்கு

ஒரே ஒரு சீராய் இயங்கும் சிறுநீரகத்துடன்
மனிதன் வாழ்வது சாத்தியம்-ஆனால்
இதயமே இல்லாமல் கூட மனிதர்
வாழமுடிகிறதே என்று தெரிந்தது
இந்தியாவில் நடந்த புலவாம படுகொலை
மற்றும் நியூஸிலாந்தில் மசூதியில்
நடந்த மற்றோர் கோர படுகொலை
இவற்றை சாத்தியமாக்கிய தீவிர வாதிகள்
மற்றும் அவர்களை தயாராக்கும் அவர்கள்
பின் இயங்கும் மனிதர் இல்லை இராக்கதர்
இப்படி இதயமில்லா மனிதராய்த் திரிவதேனோ
எத்தனை நாள் இறைவா இதை இன்னும்
நீ கேளாமல் பாராமல் இருப்பாயோ
தெரியலையே , என் நெஞ்சில் இவற்றைக்கேட்டு
உதிரம் சொட்டுதய்யா இறைவா
இவைத்தீர வழிதனை நீயேதான்
காட்டிடவேண்டும் உலகோர் உய்ய

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (17-Mar-19, 7:28 pm)
பார்வை : 94

புதிய படைப்புகள்

மேலே