வாசகசாலை

தமிழகம் முழுவதும் புத்தக வாசிப்பினை ஒரு பேரியக்கமாக உருமாற்றி வருகிறது வாசகசாலை.

நூலகம் தோறும் அவர்கள் நடத்தி வரும் நிகழ்ச்சிகள் மிகுந்த பாராட்டிற்குரியவை.

சிறந்த கவிதைகள், சிறுகதைகள், நாவல், கட்டுரை என பல்வேறு நூல்களை அறிமுகப்படுத்தி இளம்வாசகர்களை படிக்க வைக்கும் அரிய செயலை மேற்கொண்டு வருகிறார்கள். இச்செயல்பாடு பண்பாட்டு வளர்ச்சிக்கு மிகுந்த உறுதுணை செய்கிறது என்பதே நிஜம்.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற வாசகசாலையில் சிறுகதை கொண்டாட்டம் 100 வது நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினேன்.

இந்நிகழ்வில் எனது மூன்று சிறுகதைகள் குறித்து தீனதயாளன், அஸ்வினி, கதிரழகன் ஆகியோர் அற்புதமாகப் பேசினார்கள். சிறுகதைகளை ஆழ்ந்து புரிந்து கொண்டு உரையாற்றியது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் 90 விழுக்காடு இளைஞர்கள். இத்தனை பேர் தீவிரமாக வாசிக்கிறார்கள், இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்கிறார்கள் என்பது சந்தோஷம் தருகிறது.

வாசக சாலைக்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள்.

கார்த்திகேயன், அருண், அகிலா உள்ளிட்ட நண்பர்களுக்கு அன்பும் வாழ்த்துகளும்.

•••
S . ராமகிருட்டிணன்

எழுதியவர் : (18-Mar-19, 4:49 am)
பார்வை : 35

சிறந்த கட்டுரைகள்

மேலே