அபிநந்தன்
அபிநந்தா!! அபிநந்தா!
தாயின் கருவறையில் நுழையும்போதே
வீரத்தின் விந்துவாகத்தான் நீ நுழைந்தாய்
ஜல்லிக்கட்டு காளையின்
கொம்பில் பிறந்தவன் நீ...
சிங்கத்தின் வாய்க்குள் நுழைந்து
சிங்கார ஓவியம்
வரைய பிறந்தவன் நீ...
அபிநந்தா!! அபிநந்தா!
உன் பெயரிலேயே
உனக்கான வாழ்த்துக்களுடன்
நீ வலம் வருகிறாய் ...
தென்றலின் மடியில் தூங்கப்
பிறந்தவன் அல்ல நீ...
புயலோடு போராடப் பிறந்தவன் நீ...
பிழைப்பேனே, மாட்டேனா,
என்றெல்லாம் எண்ணிக் கலங்காமல்,
துயரெல்லாம் துச்சமாக மிதித்து
சுனாமி தாண்டி வந்தவன் நீ ....
ஒரு முறை அல்ல
எத்தனை முறை வேண்டுமானாலும்
எமன் உன்னுடன் போட்டியிடட்டும்
ஜெயிக்கப் போவது நீயே...
சிரமத்தை தலைமீது கீரீடமாக சுமக்கும்
உனதான வீரத்தை
தனதாக நினைத்தாலே
கருவிலிருக்கும் குழந்தை அத்தனையும்
இந்திய மண்ணில் என்றென்றும்
வெற்றிக்கு கொடியை ஏற்றி பறக்க விட்டு
எதிரி நாட்டை அலைக்கடலில் தள்ளிவிடும்....

