காதல் சிறை

கண்களால் சிறை பிடித்தேன் - உன் உருவை,
மனதில் வரைந்து கொண்டேன்..
காதால் சிறை பிடித்தேன் - உன் குரலை,
இதயத்தில் கலந்து கொண்டேன்...
மூச்சால் சிறை பிடித்தேன் - உன் வாசத்தை,
உயிரோடு ஒளித்து கொண்டேன்...
நாவால் சிறை பிடித்தேன் - உன் எச்சிலை,
அமுதென சேமித்து கொண்டேன்...
கைகளால் சிறை பிடித்தேன் - உன் விரல்களை,
நரம்புகளில் பின்னிக் கொண்டேன்...
அன்பால் சிறை பிடித்தேன் - உன் மனதை,
கைதியானேன் காதல் சிறையில்...

எழுதியவர் : ரூபி (18-Mar-19, 4:09 pm)
சேர்த்தது : ரூபி
Tanglish : kaadhal sirai
பார்வை : 267

மேலே