துரோகமே தூரம்போ

துரோகமே தூரம்போ...

அன்பின் ஊற்றால் நிறைந்த என்னை வெறுமையாக்க எண்ணினாயே !!!

ஆனந்த ஒலியை கேட்கும் என் செவிப்பறைகளை அலறலால் நிரப்ப பார்த்தாயே !!!

மகிழ்ச்சி பொங்க இருந்த என்னை மட்டுப்படுத்த முயன்றாயே !!!

நேர்மறை சிந்தையுள்ள என்னை எதிர்மறையாக்க எண்ணி தோற்றாயே !!!

உண்மையை காக்க முயலும் என்னை பொய்க்காரனாக்க நினைக்கும்போதே வீழ்ந்தாயே !!!

பொறுமை கடைபிடித்தலை ஏமாறுகிறான் என கணக்கிட்டு ஏமாந்துபோனாயே !!!

சுயமரியாதை கூட்டத்தில் உழன்ற என் முன்னே உன் திமிரெல்லாம் நிமிராது....

எழுதியவர் : ஜான் (18-Mar-19, 8:22 pm)
சேர்த்தது : ஜான்
பார்வை : 160

மேலே