ஆவுடையப்பன்

அகர அண்டம் உகரப் பிண்டம்

அகர விந்து உகர நாதமாம்

உகரநா தமதில் விந்திணையை உயிராம்

அண்டநா தமதில் பிண்டவிந் துசேரவும்

அண்ட வுலகில் பெருகும் பிண்ட உயிர்

ஆண்பெண் சேர்க்கை எண்ணிக் கையிலாக்

கண்கா ணாத்தொழில் உலகின் பெருந்தொழில்

அண்டபூ மியிலித் தொழிலேப் பிரதானம்

ஆண்டவனே லிங்கமாய்த் தோன்றிச் சொன்னார்

உலகின் உற்பத்தியே லிங்கம்

ஆண்பெண் சேர்ந்த உருவாவு டையப்பனே


--------------------
பழனி ராஜன்

எழுதியவர் : பழனி ராஜன் (19-Mar-19, 6:44 pm)
பார்வை : 27

மேலே