தெம்மாங்கு

சொக்க வைத்த சுந்தரியே
சொந்தமென்று வந்து விடு. /
உன் சுண்டு விரல் கொண்டு.
சூடு கொஞ்சம் ஏத்தி விடு. .../

தனியாக வந்து நின்று விடு. /
பனி பட்ட என் உடலுக்கு
துணையாக சேர்ந்து விடு. /
கனி இதழைத் தந்து விடு./



விழி மொழியை நிறுத்தி விடு. /
மடி மீது இடம் ஒதுக்கி விடு. /
உன் கொடி இடை தொடும் சேலைக்கு விடுதலை கொடுத்து விடு..../

கூடலும் ஊடலும்
நமக்குச் சம பங்கு /
கூடி விட்டால்
உன் வெட்கமும் நாணமும்
அச்சமும்
தயக்கமும் பறந்து விடும் இங்கு/

அன்பே என் நெஞ்சணை உமக்கு
பஞ்சணையாக மாறிவிடும் /
பெண்ணே நாம் பாடலாம் நித்தமும்
புதுப் புது தென்மாங்கு /

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (19-Mar-19, 8:24 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : themmangu
பார்வை : 101

மேலே