கனிந்த மனங்கள் -

நவமணி
நந்தனி
வெண்பனி
நீயோ!
மின்மினிச் சிலையோ!

சிலையில்
சிறுவிழி
சிறகாய்
இரு இமை
இறக்கை, விரித்தது நீயடி
பறக்கிறேன் நானடி

பருவம் பழகிடும்
பார்வை பழம்தொட
பலநாள் கனவில்
துணையாய் நீயடி
தலையணை அணைத்து
பாயையும் மறந்து
படுத்தேன் நானடி
பாவம் பாரா
பாவி மகளே
பருவம் மலர்ந்தால்
பார்வையும் வீணடி

ஆழ்கடல்
உன்னுடல் -அதில்
மூழ்கடி எனையும்
முழுமதியெனவே
நில்லா நின் நரலையில்
நீந்தும் கலைகளில்
நானே தலைமகன்.

ஆயினும், அன்பே
தயக்கம் ஏனோ
தலைமேல் நிற்க,
காதலும் மெல்ல
கண்டம் கவ்வி
காமம் தவறே லென
காதில் சொல்லுதடி


எழுதியவர் : கல்லறை செல்வன் (19-Mar-19, 10:33 pm)
பார்வை : 534

மேலே